சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 அண்மைக்காலத் தகவல்கள்.

கோவிட்-19 பாதிப்பில் இருந்து மொத்தமாக 95,526 நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர்.

Posted On: 02 JUN 2020 6:23PM by PIB Chennai

இந்தியாவில் தற்போது 97,581 கோவிட்-19 தொற்றுள்ள நபர்கள் உள்ளனர்அவர்கள் அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர்கடந்த 24 மணி நேரத்தில் 3708 கோவிட்-19 நோயாளிகள் குணம் அடைந்து உள்ளனர். இதுவரை மொத்தமாக 95,526 நோயாளிகள் கோவிட்-19இல் இருந்து குணம் அடைந்துள்ளனர்கோவிட்-19 நோயாளிகளில் குணம் அடைவோர் விகிதம் 48.07 சதவீதமாக  உள்ளதுஇந்தியாவில் குணம் அடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இறப்பு விகிதம் உலகிலேயே மிகவும் குறைவாக இருக்கின்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறதுஇன்று வரை, இறப்பு விகிதம் 2.8  சதவீதமாக இருக்கிறது.

இந்தியாவின் மக்கள் தொகையும் கோவிட்-19ஆல் பெருமளவில் பாதிக்கப்பட்ட 14 நாடுகளின் மொத்த மக்கள்தொகையும் ஏறத்தாழ சம அளவில் உள்ளதுசம எண்ணிக்கையில் மக்கள்தொகை இருந்தாலும் கூட 1 ஜுன் 2020 அன்றுள்ளபடி அதிகம் பாதித்த அந்த 14 நாடுகளின் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவின் எண்ணிக்கையை விட 22.5 மடங்கு அதிகமாக இருக்கிறதுஅதே போன்று இந்த 14 நாடுகளில் கோவிட்-19ஆல் ஏற்பட்ட மொத்த மரணம் இந்தியாவை விட 55.2 மடங்கு அதிகமாக இருக்கிறது

இந்தச் சூழ்நிலையில் இறப்பைக் குறைப்பதற்கும் ஆரம்ப நிலையிலேயே நோயாளிகளைக் கண்டறிவதற்கும் நோயாளிகளை மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்து நிர்வகிப்பதற்கும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறதுகுறைவான மரணம் என்பது ஆரம்ப கட்டத்திலேயே நோயாளிகளைக் கண்டறிதல் மற்றும் நோயாளிகளுக்கான மருத்துவமனை சிகிச்சை மேலாண்மை என்ற இரண்டு செயல்உத்திகளோடு தொடர்புடையதாக இருக்கிறது

கோவிட்-19 இறப்பு குறித்து கிடைக்கக் கூடிய தகவல்களைப் பகுப்பாய்வு செய்து பார்க்கும் போது 10 சதவிகித இந்திய மக்கள் தொகையினர் தான் (60 வயதிற்கும் மேற்பட்டோர்)  கோவிட்-19 இறப்பில் 50 சதவிகித பங்கினை வகிக்கின்றனர்இந்தியாவில் ஏற்படுகின்ற 73 சதவிகித கோவிட்-19 இறப்புகள் ஏற்கனவே நோய் உள்ள நபர்களுக்குத் தான் (நீரிழிவு, உயர்இரத்த அழுத்தம், இருதய நாளக் கோளாறு மற்றும் சுவாச மண்டல நோய்கள்) ஏற்படுகிறதுஎனவே இத்தகைய ஆபத்துக்காரணி அதிகமாக உள்ள குழுவினர் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாக்கப்பட வேண்டும்அவசரத் தேவையைத் தவிர இவர்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கி இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கோவிட்-19ஐ வெற்றி கொள்வதற்கான நமது போராட்டம் ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும் ஜன் அபியான்குடிமக்கள் #IndiaWillWin என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விழிப்புணர்வு, முன்தடுப்பு முயற்சிகள் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை என்ற மூன்று நடவடிக்கைகளிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கோவிட்-19க்கு எதிராக இணைந்து போராடவும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.(Release ID: 1628792) Visitor Counter : 113