பிரதமர் அலுவலகம்

ஸ்பிக் மாக்கே ( spic MACAY’s) சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றுகிறார்

130 கோடி மக்கள் ஒன்றிணையும் போது, அது இசையாகிறது: பிரதமர்
நாட்டின் கூட்டுப்பலத்தின் மூலமாக இசை மாறிவிட்டது
என பிரதமர் கூறுகிறார்

Posted On: 01 JUN 2020 7:46PM by PIB Chennai

ஸ்பிக் மாக்கே சர்வதேச கருத்தரங்கில் காணொலி காட்சி மூலம் பிரதமர் இன்று உரையாற்றினார்இந்த சிக்கலான நேரத்திலும் இசைக் கலைஞர்களின் உத்வேகம் தடைபடாமலிருப்பதையும் மற்றும் இந்த மாநாட்டின் நோக்கம் கோவிட்-19 தொற்று நேரத்தில் இளைஞர்களிடையே ஏற்பட்ட மன அழுத்தத்தைப் எப்படி போக்குவது என்பதில் கவனம் செலுத்துவதையும் பிரதமர் பாராட்டினார்.

போர் போன்ற நெருக்கடியான நேரங்களில் வரலாற்று சிறப்புமிக்க இசை எப்படி ஊக்குவிக்கும் மற்றும் ஒத்திசைவு பங்காற்றும் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

இது போன்ற நேரங்களில் மக்களின் தைரியத்தை வெளிக்கொணர கவிஞர்கள், பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் எப்போதும் பாடல்கள் மற்றும் இசையை கொண்டு வருகின்றனர்  என அவர் கூறினார்.

கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்து இந்த உலகம் போராடும் இந்த சிக்கலான நேரத்திலும் கூட பாடகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் பாடல் வரிகளை எழுதி பாடுகின்றனர்.  இது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது.

கொரோனா  தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், நாட்டின் 130 கோடி மக்களும் எப்படி ஒன்றிணைந்து கைதட்டி, மணியடித்து, சங்கு ஊதி ஒட்டுமொத்த நாட்டையும் ஊக்குவித்தனர் என்பதை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

இதே போன்று உணர்வுடன். 130 கோடி மக்களும் ஒன்றிணையும் போது அது இசையாகிறது என அவர் கூறினார்.

இசைக்கு இணக்கம் மற்றும் ஒழுங்கு தேவை. அதேபோன்ற இணக்கம், கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம், கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடும் ஒவ்வொருவருக்கும் தேவை என்று அவர் கூறினார்.

இந்தாண்டு ஸ்பிக் மாக்கே மாநாட்டில் இயற்கை நடை, பாரம்பரிய நடை, இலக்கியம், முழுமையான உணவு, யோகா மற்றும் நாத் யோகா போன்ற புதிய விஷயங்கள் இடம் பெற்றதை அவர் பாராட்டினார்.

 நாத் யோகா பற்றி அவர்  விளக்கி கூறுகையில், நாதம் தான் இசைக்கு அடிப்படையாகக் கருதப்படுகிறது.  மேலும், சக்தி அடிப்படையாகக் கருதப்படுகிறது.

நமக்குள் இருக்கும் சக்தியை யோகா மற்றும் இசை மூலம் ஒழுங்குபடுத்தும்போது நாதம் படிப்படியான ஒலிப்பெருக்கத்தைச் சென்றடைகிறது.

இசை மற்றும் யோகாவுக்கு, தியானம்  மற்றும்  ஊக்குவிக்கும் சக்தி உள்ளது. அதனால்தான் இரண்டும் சக்தியின் மிகப்பெரிய ஆதாரங்களாக உள்ளன  என பிரதமர் கூறினார்.

இசை மகிழ்ச்சியின் ஆதாரமாக மட்டுமில்லை சேவை மற்றும் தவமாகவும்  உள்ளது.

மனித நேயத்திற்கு சேவை ஆற்றுவதற்காகவே வாழ்ந்த  பல இசைக்கலைஞர்கள் நம் நாட்டில் இருந்திருக்கின்றனர்  என அவர் கூறினார்.

பழங்கால கலை மற்றும் இசையை தொழில்நுட்பத்துடன் இணைப்பது, இப்போதைய  தேவையாக உள்ளது எனப் பிரதமர் கூறினார்.

மாநிலங்கள் மற்றும் மொழி எல்லைகளைத் தாண்டி இசை இன்று ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற கருத்துக்கு வலு சேர்க்கிறது என்று அவர் கூறினார்.

 கொரோனாவுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்த மக்கள் தங்களின் படைப்பு மூலம், சமூக இணைய தளங்களில், புதிய தகவல்களை அளிப்பதைப் பிரதமர் பாராட்டினார்

கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் இந்த மாநாடு புதிய திசையை அளிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.


(Release ID: 1628621) Visitor Counter : 240