பிரதமர் அலுவலகம்
மாநில தினத்தை முன்னிட்டு தெலங்கானா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து; ஆந்திர மக்களுக்கும் வாழ்த்து
Posted On:
02 JUN 2020 9:51AM by PIB Chennai
மாநில தினத்தை முன்னிட்டு, தெலங்கானா மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘‘மாநில தினத்தை முன்னிட்டு தெலங்கானா மக்களுக்கு வாழ்த்துகள். பலதுறைகளில் இந்த மாநில மக்கள் சிறந்து விளங்குகின்றனர். இந்தியாவின் வளர்ச்சியில், இந்த மாநிலம் மதிப்பு மிக்க பங்களிப்பை அளிக்கிறது. தெலங்கானா மக்களின் முன்னேற்றத்துக்காகவும், வளமைக்காகவும் நான் வேண்டுகிறேன்.
ஆந்திர மக்களுக்கும் வாழ்த்துக்கள். கடின உழைப்பு மற்றும் துணிவுதான் இந்த மாநிலத்தின் பண்பாடு. இந்தியாவின் வளர்ச்சியில் ஆந்திராவின் பங்கு மிகவும் மதிக்கப்படுகிறது. ஆந்திர மக்களின் சிறந்த எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகிறேன்’’ என பிரதமர் கூறியுள்ளார்.
(Release ID: 1628555)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam