ரெயில்வே அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        2020 ஜூன் 1 முதல் நாடு முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயங்கத் தொடங்குகின்றன
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                31 MAY 2020 6:12PM by PIB Chennai
                
                
                
                
                
                
                மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் கலந்தாலோசனை செய்த பின்னர் ரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வே ஒரு பகுதி ரயில் இயக்கத்தை மீண்டும் ஜூன் 1-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது. ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் 200 ரயில்களில் 1.45 லட்சம் பயணிகளுக்கும் மேல் பயணம் செய்வார்கள். நாளை (அதாவது ஜூன் 1, 2020) இந்திய ரயில்வே 200 பயணிகள் ரயில் சேவையை தொடங்குகிறது. அதன் பட்டியல் இணைப்பில் தரப்பட்டுள்ளது. (இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது).
பயணிகள் ரயில் சேவையைப் படிப்படியாக மீண்டும் தொடங்குவதன் முக்கிய நடவடிக்கையாக, இந்திய ரயில்வே நாளை 200 ரயில்களை, ஏற்கனவே மே 1-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மற்றும் மே 12 முதல் இயக்கப்படும் சிறப்பு ஏசி ரயில்களுடன் (30 ரயில்கள்) இயக்கத் தொடங்குகிறது. 
இந்த ரயில்கள் வழக்கமாக இயக்கப்படும் ரயில்களாகும். முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட இவற்றில் ஏசி மற்றும் ஏசி அல்லாத பெட்டிகள் இணைக்கப்படும். முன்பதிவு செய்யப்பட்ட பொதுப்பெட்டிகள் உட்காரும் வசதி கொண்டவை. இந்த ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இருக்காது. வகுப்பு வாரியாக வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும். முன்பதிவு செய்யப்பட்ட பொதுப்பெட்டிகளில், இரண்டாம் வகுப்பு முன்பதிவு இருக்கைக் கட்டணம் வசூலிக்கப்படும். அனைத்து பயணிகளுக்கும் இருக்கை அளிக்கப்படும்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி, மொத்தப் பயணிகள் முன்பதிவு 25,82,671. இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசியின் வலைதளம் அல்லது கைபேசி செயலி மூலமாக ஆன்லைன் வழியில் செய்யப்பட்டு வருகிறது. மே 22, 2020 முதல், டிக்கெட்டுகளை முன்பதிவுக் கவுண்டர்கள், பொதுச்சேவை மையங்கள், பயணச்சீட்டு முகவர்கள் மூலமும் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
 
இணைப்புக்கான லிங்க் : https://static.pib.gov.in/WriteReadData/userfiles/200%20trains(100%20Pairs).pdf(1).pdf
****
 
                
                
                
                
                
                (Release ID: 1628255)
                Visitor Counter : 282
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada