ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கோவிட்-19 பிரச்சனையை எதிர்கொள்ள, சுகாதாரத்துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மத்திய மையம்(சிபெட்) மேற்கொள்ளவுள்ளது; பிபிஇ பாதுகாப்பு உடைகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான இதர தயாரிப்புகளை உற்பத்தி செய்து சான்றளிக்கவுள்ளது

Posted On: 27 MAY 2020 1:37PM by PIB Chennai

கோவிட்-19 பிரச்சனையை எதிர்கொள்ள, பிபிஇ பாதுகாப்பு உடைகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான இதர தயாரிப்புகளை உலக சுகாதார நிறுவனம் / ஐஎஸ்ஓ விதிமுறைகள்படி உற்பத்தி செய்து சான்றளிப்பது போன்ற, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முன்னணி நிறுவனமான பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மத்திய மையம் (சிபெட்) மேற்கொள்ளவுள்ளது.

அமைச்சரவை செயலாளர் உத்தரவுப்படி, சுகாதார நலன் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சிபெட் தெரிவித்துள்ளது. இதற்கேற்ப, பிபிஇ பாதுகாப்பு உடைகள் மற்றும் இதைச் சார்ந்த பொருட்களை உலக சுகாதார நிறுவனம் / ஐஎஸ்ஓ விதிமுறைகள்படி உருவாக்குவதற்கான சோதனை மையங்கள் மற்றும் சோதனைக் கூடங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் (NABL), புவனேஸ்வர், சென்னை, மற்றும் லக்னோவில் உள்ள 3 சிபெட் பிளாஸ்டிக் தொழில்நுட்ப மையங்களுக்கான அங்கீகாரம் ஆகியவை விரைவில் தயாராகும்.

ஜெய்ப்பூரில் உள்ள சிபெட் சிஎஸ்டிஎஸ் (திறன் மற்றும் தொழில்நுட்ப உதவி மையம்), லக்னோவில் உள்ள சிபெட் பிளாஸ்டிக் தொழில்நுட்ப மையம், மற்றும் மதுரையில் உள்ள சிபெட் சிஎஸ்டிஎஸ் ஆகியவை முக தடுப்பான்களை உருவாக்கியுள்ளன. மேலும் இதற்கான சட்டகங்கள் உற்பத்தியும் நடந்து கொண்டிருக்கிறது.

------



(Release ID: 1627171) Visitor Counter : 280