குடியரசுத் தலைவர் செயலகம்

ஈத் திருநாளையொட்டி (Idu’lFitr ) குடியரசுத் தலைவர் வாழ்த்து.

Posted On: 24 MAY 2020 5:42PM by PIB Chennai

ஈத் திருநாளையொட்டி (Idu’lFitr ), குடிமக்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

வெளிநாடு வாழ் இந்தியர்கள் உட்பட இந்திய குடிமக்கள் அனைவருக்கும் புனித ரமலான் மாதத்தின் வழிபாடுகளையும் நோன்பையும் அடுத்து வரும் Id-ul-Fitr  திருநாளுக்கான வாழ்த்துக்கள். இந்தப் பண்டிகை அன்பு அமைதி சகோதரத்துவம் நல்லிணக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. சமுதாயத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவு மக்கள் மீது அக்கறை செலுத்தவும், அவர்களுடன் கிர்ந்து கொள்வதும் எங்கள் நம்பிக்கை என்பதை இந்த நேரத்தில் மீண்டும் உறுதி அளிக்கிறோம்.

 

கோவிட்-19 வைரஸ் காரணமாக உருவாகியுள்ள எதிர்பாராத நெருக்கடியை நாம் எதிர் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஈகை என்ற தன்மையை (Zakaat)  நாம் மேலும் உத்வேகத்துடன் தொடர வேண்டும். சமூக விலகியிருத்தல் விதிமுறைகளைப் பின்பற்றுவது, பாதுகாப்பாக இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பது; இந்த சவாலை விரைவில் வெற்றி கொள்வது என்று நாம் உறுதி பூண வேண்டும்.க்கம், தொண்டு, நம்பிக்கை ஆகிய உலக அளவிலான மதிப்புகளை உலகிற்கு இந்த ஈத் திருநாள் கொண்டு வரட்டும்.”

 

குடியரசுத் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியை இந்தியில் வாசிக்க இங்கே சொடுக்கவும்

 

 

****


(Release ID: 1626607)