சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 அண்மைத் தகவல்

இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 7.9 பேர் என்ற அளவிலேயே பாதிப்பு உள்ளது. உலகளவில் ஒப்பிடுகையில் இது ஒரு லட்சம் பேருக்கு 62.3 ஆக உள்ளது. குணமடைவோர் வீதம் 39.6% ஆக உள்ளது

Posted On: 20 MAY 2020 6:23PM by PIB Chennai

கோவிட்-19 பரவல் வேகத்தை இந்தியாவில் குறைக்க முடிகிறது. கோவிட்-19 பாதித்தவர்களின் புள்ளி விவரங்கள் மூலம் இதை பார்க்க முடிகிறது. உலகளவில் ஒப்பிடுகையில், ஒரு லட்சம் பேருக்கு 62.3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் இது ஒரு லட்சம் பேருக்கு 7.9  பேர் என்ற அளவிலேயே பாதிப்பு உள்ளது. இதேபோல், இறப்பும் உலகளவில் ஒரு லட்சம் பேருக்கு 4.2 என்ற வீதத்தில் உள்ளது. இந்தியாவில் 0.2 என்ற அளவிலேயே உள்ளது. பாதிக்கப்பட்டவர்களை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு சிகிச்சை அளித்ததால், இந்தியாவில் இறப்பு வீதம் குறைவாக உள்ளது.

மருத்துவமனை மேலாண்மையில் செலுத்திய கவனத்தால், குணமடைவோர் வீதம் அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 39.6 சதவீதத்துக்கும் அதிகமானோர், அதாவது இன்று வரை 42,298 பேர் குணமடைந்துள்ளனர். கோவிட்19 குணப்படுத்தக் கூடியது. மேலும் இந்தியாவில் பின்பற்றப்பட்ட மருத்துவமனை மேலாண்மை விதிமுறைகள் நல்ல பயன் அளித்துள்ளன. 2.9% நோயாளிகளுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. 3% நோயாளிகளுக்கு மட்டுமே தீவிர சிகிச்சை வசதி தேவைப்படுகிறது. 0.45 சதவீதம் பேருக்கு மட்டுமே வென்டிலேட்டர் வசதி தேவைப்படுகிறது. கோவிட்டுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது.



(Release ID: 1625698) Visitor Counter : 178