மத்திய அமைச்சரவை

தற்போதுள்ள “பகுதியளவிலான கடன் உறுதித் திட்ட”த்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 20 MAY 2020 2:30PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை பொதுத்துறை வங்கிகள் பகுதியளவிலான கடன் உறுதித் திட்டத்தின் விரிவாக்கத்தின் மூலம் வங்கியல்லாத நிதிநிறுவனங்கள், குறு நிதிநிறுவனங்கள் ஆகியவற்றால் வெளியிடப்படும் (ஓராண்டு வரையில் தொடக்க கால முதிர்வு கொண்ட/ மூலத்துடன் ஒப்பிடப்படாத  காகிதம் உள்ளிட்டு) ஏஏ வரை அல்லது அதற்கும் குறைவான மதிப்பீடு கொண்ட கடன் பத்திரங்கள் அல்லது வணிகப்பத்திரங்களை வாங்குவதில் முதலில் ஏற்படும் 20 சதவீத இழப்பு வரையில் அரசு பத்திரங்களின் மூலம் உறுதி அளிப்பதற்கு தனது ஒப்புதலை வழங்கியது.

திரட்டப்பட்ட சொத்துக்களை வாங்குவதில் தற்போதுள்ள பகுதியளவிலான கடன் உறுதித்திட்டத்தில் மாற்றங்களைச் செய்யவும் மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கி, கீழ்க்கண்ட வகையில் அதன் வீச்சை அதிகரித்துள்ளது:

     தொழில்நுட்பக் காரணங்களுக்காக மட்டுமே எஸ் எம் ஏ – 1 வகையின் கீழ் 1.8.2018 முந்தையதான கடந்த ஓராண்டு காலத்தில் வங்கியல்லாத நிதிநிறுவனங்கள்/ வீட்டுவசதி நிதிநிறுவனங்கள் ஆகியவை தெரிவித்தவை. இதற்கு முன்பு இக்காலப்பகுதியில் எஸ் எம் ஏ-1 அல்லது எஸ் எம் ஏ -2 ஆகியவையாக வங்கியல்லாத நிதிநிறுவனங்கள்/ வீட்டு வசதி நிதிநிறுவனங்கள் தெரிவித்தவை இத்திட்டத்தின்கீழ் தகுதியற்றவையாக கருதப்பட்டுவந்தன.

சம்பந்தப்பட்ட இந்த வங்கியல்லாத நிதிநிறுவனங்கள்/ வீட்டு வசதி நிதிநிறுவனங்களின் நிகர லாபத்திற்கான அளவுகோல் தளர்த்தப்படுகிறது. அதாவது 2017-18, 2018-19, 2019-20 ஆகிய நிதியாண்டுகளில் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு நிதியாண்டில் அவை லாபம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு முன்பு 2017-18, 2018-19-20 ஆகிய நிதியாண்டுகளில் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு நிதியாண்டில் அவை லாபம் பெற்றிருக்க வேண்டும் என்பதாக இந்த அளவுகோல் இருந்தது.

சொத்துக்களின் தொடக்க தேதிக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய புதிய சொத்துக்களையும் உள்ளடக்கிக் கொள்ள  வழியமைக்கும் வகையில் சொத்துக்களின் தொடக்க தேதி குறித்த அளவுகோலில் தளர்வுக்கு அனுமதிக்கப்படுகிறது. இதற்கு முன்பு இத் திட்டத்தின் கீழ் 31.03.2019 வரையில் தொடங்கப்பட்ட சொத்துக்கள் மட்டுமே தகுதியுள்ளவையாக இருந்தன.

· திரட்டப்பட்ட சொத்துக்களை வாங்குவதற்காக இத்திட்டமானது 30.6.2020லிருந்து 31.3.2021 வரை நீட்டிக்கப்படுகிறது.(Release ID: 1625402) Visitor Counter : 33