சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலக அளவில் ஒரு லட்சம் பேருக்கு சராசரியாக 4.1 என்ற அளவில் கோவிட்-19 நோயாளிகள் மரண விகிதம் உள்ள நிலையில் ஒப்பிடும்போது, இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு மரண விகிதம் சுமார் 0.2 என்ற அளவில் உள்ளது
Posted On:
19 MAY 2020 3:43PM by PIB Chennai
கடந்த 24 மணி நேரத்தில் 2,350 கோவிட்-19 நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். இதுவரையில் கோவிட் நோய் பாதித்தவர்களில் மொத்தம் 39,174 பேர் குணமாக்கப் பட்டுள்ளனர். அதாவது கோவிட் நோயாளிகளில் 38.73 சதவீதம் பேர் குணமாகியுள்ளனர். குணமாகும் நோயாளிகளின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இப்போது இந்தியாவில் இந்த நோய் பாதிப்புக்கு 58,802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். சிகிச்சை பெறுபவர்களில் 2.9 சதவீதம் பேர் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
கோவிட்-19 நோயாளிகள் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு எவ்வளவு பேர் இறக்கிறார்கள் என்ற வகையில் பார்த்தால், உலக அளவில் ஒரு லட்சம் பேருக்கு சராசரியாக 4.1 என்ற அளவில் மரண விகிதம் உள்ள நிலையில், இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு மரண விகிதம் சுமார் 0.2 என்ற அளவில் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை-119-ன் படி, ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு அதிக அளவுக்கு மரணங்கள் நிகழ்ந்துள்ள நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது:
நாடுகள்
|
மொத்த மரணங்கள்
|
ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மரண விகிதம்
|
உலக அளவில்
|
3,11,847
|
4.1
|
அமெரிக்கா
|
87180
|
26.6
|
பிரிட்டன்
|
34636
|
52.1
|
இத்தாலி
|
31908
|
52.8
|
பிரான்ஸ்
|
28059
|
41.9
|
ஸ்பெயின்
|
27650
|
59.2
|
பிரேசில்
|
15633
|
7.5
|
பெல்ஜியம்
|
9052
|
79.3
|
ஜெர்மனி
|
7935
|
9.6
|
ஈரான்
|
6988
|
8.5
|
கனடா
|
5702
|
15.4
|
நெதர்லாந்து
|
5680
|
33.0
|
மெக்சிகோ
|
5045
|
4.0
|
சீனா
|
4645
|
0.3
|
துருக்கி
|
4140
|
5.0
|
ஸ்வீடன்
|
3679
|
36.1
|
இந்தியா
|
3163*
|
0.2
|
* 2020 மே 19 வரையிலான தகவல்.
உரிய சமயத்தில் நோயாளிகளைக் கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த காரணத்தால், ஒப்பீட்டளவில் மரண விகிதங்கள் குறைவாக உள்ளன.
நேற்று நாட்டில் மிக உயர்ந்தபட்ச எண்ணிக்கையாக 1,08,233 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் மொத்தம் 24,25,742 மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளன.
ஜனவரியில் ஒரு ஆய்வகத்தில் மட்டும் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 385 அரசு ஆய்வகங்கள், 158 தனியார் ஆய்வகங்களில் இந்தப் பரிசோதனையை உருவாக்கி வசதிகள் மிக வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் அனைத்து ஆய்வகங்கள், மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் துறை ஆய்வகங்களை ஒருங்கிணைத்து நாட்டில் கோவிட் பரிசோதனைத் திறன் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகளைத் தீவிரப்படுத்துவதற்காக TrueNAT மற்றும் CBNAAT போன்ற மருத்துவப் பரிசோதனைக் கருவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவிட்-19 மருத்துவப் பரிசோதனைக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. முந்தைய வரையறைகளுடன் சேர்த்து, கோவிட்-19 நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும் முன்களப்பணியாளர்கள், தீவிர மூச்சுக்கோளாறு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகள், நாடு திரும்பியவர்கள் மற்றும் குடிபெயர்ந்து சென்று சொந்த ஊர் திரும்பியவர்களில் தீவிர மூச்சுக்கோளாறு உள்ள அனைவருக்கும் உடல்நலம் குன்றிய 7 நாட்களுக்குள் மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு:
https://www.mohfw.gov.in/pdf/Revisedtestingguidelines.pdf
பணியிட ஏற்பாட்டு வளாகங்களில் கோவிட்-19 பரவுதலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களையும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பணியிடத்தில் கோவிட்-19 பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப் பட்டாலோ அல்லது நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டாலோ இவற்றைப் பின்பற்ற வேண்டும். இந்த வழிகாட்டுதல்களைப் பின்வரும் இணையதள சுட்டியில் காணலாம்:
https://www.mohfw.gov.in/pdf/GuidelinesonpreventivemeasurestocontainspreadofCOVID19inworkplacesettings.pdf
பல் மருத்துவர்கள், அது தொடர்பான சேவைகளில் இருப்போர் மற்றும் பல் நோயாளிகளுக்கு நோய் தொற்றுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதால், கோவிட்-19 பாதிப்பு சூழ்நிலையில் பல் சிகிச்சை அளிப்பவர்களுக்கான வழிகாட்டுதல்களையும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விரிவான வழிகாட்டுதல்களைப் பின்வரும் இணையதள சுட்டியில் காணலாம்:
https://www.mohfw.gov.in/pdf/DentalAdvisoryF.pdf
அனைத்து அலுவலர்கள் மற்றும் வருகை தருபவர்களும் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை அளவிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த வழிகாட்டுதல்கள் காட்டுகின்றன. நோய்த் தாக்குதல் உறுதி செய்யப்பட்டால், தொடர்பு கொண்டவர்களைக் கையாளுதல் மற்றும் கிருமிநீக்கம் உள்ளிட்ட நடைமுறைகளும் இதில் விரிவாக அளிக்கப் பட்டுள்ளன.
(Release ID: 1625142)
Read this release in:
Urdu
,
Punjabi
,
Hindi
,
English
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam