மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்தார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்.

Posted On: 18 MAY 2020 5:04PM by PIB Chennai

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வுகளுக்கான தேதிகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் `நிஷாங்க்' இன்று புதுடெல்லியில் அறிவித்தார். 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வடகிழக்கு டெல்லியில் மட்டும் நடைபெறும் என்றும், 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வடகிழக்கு டெல்லி உள்பட நாடு முழுக்க நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். அனைத்துத் தேர்வுகளும் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையில் நடைபெறும்.

முன்னர் மே 5 ஆம் தேதி இணையவழி கலந்துரையாடலில் பங்கேற்ற திரு பொக்ரியால், சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வுகள் ஜூலை 1 முதல்  15 ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று கூறியிருந்தார்.

தேர்வுக்கான தேதிகளை அறிவிக்கும்போது, மாணவர்கள் தயார்படுத்திக் கொள்வதற்குப் போதிய அவகாசம் அளிப்பதை உறுதி செய்வதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்தும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப் படுவதை உறுதி செய்ய, தேர்வுகளின் போது தனி நபர் இடைவெளி நடைமுறைகளைப் பின்பற்ற சி.பி.எஸ்.இ.-க்கு அறிவுறுத்தப் பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு அமைச்சர் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

10 ஆம் வகுப்பு தேதி விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

12 ஆம் வகுப்பு தேதி விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

 

*****



(Release ID: 1624916) Visitor Counter : 190