உள்துறை அமைச்சகம்

முடக்கம் மே 31,2020 வரை நீட்டிப்பு

Posted On: 17 MAY 2020 8:13PM by PIB Chennai

கடந்த மார்ச் 24, 2020 முதல் மேற்கொள்ளப்பட்ட முடக்க கால நடவடிக்கைகள் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவு உதவியுள்ளன. அதனால் இந்த முடக்க காலத்தை மே 31, 2020 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டள்ளது. இது தொடர்பாக பேரிடர் நிர்வாக சட்டம், 2005-ன் கீழ், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. புதிய வழிகாட்டு விதிமுறைகளின் சிறப்பம்சங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

 

பல மண்டலங்களில் மாநிலங்கள் முடிவு செய்யலாம்

மத்திய சுகாதாரத்தறை அமைச்சகத்தின் அளவுகோல்களை கருத்தில் கொண்டு சிவப்பு, பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களை புதிய விதிமுறைகளின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வரையறுத்துக்கொள்ளலாம். இந்த மண்டலங்கள் மாவட்டமாகவோ, மாநகராட்சியாகவோ, நகராட்சியாகவோ, அல்லது சப்-டிவிஷன் போல் சிறிய நிர்வாக பகுதிகளாகவோ, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அமைத்துக் கொள்லாம்.

சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களுக்குள், கட்டுப்படுத்தல் மற்றும் காப்பு மண்டலங்களை, மத்திய சுகாதாரத்தறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி உள்ளூர் அதிகாரிகள் வரையறுக்க வேண்டும்.

கட்டுப்படுத்தல் மண்டலங்களுக்குள், தேவையான செயல்பாடுகளை மட்டும் அனுமதிக்க வேண்டும். சுற்றுவட்ட கட்டுப்பாடு விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும். மருத்துவ அவசரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை தவிர மக்கள் நடமாட்டத்தை அனுமதிக்கக் கூடாது. கட்டுப்படுத்தல் மண்டலத்தின் அருகேயுள்ள காப்பு மண்டலங்களில், புதிய தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால் காப்பு மண்டலங்களில், அதிக எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள்

ஒரு குறிப்பிட்ட அளவிலான செயல்பாடுகளுக்கு நாடு முழுவதும் தொடர்ந்து தடை இருக்கவேண்டும். இவைகள் உட்பட

  • மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்த பாதுகாப்பு காரணங்கள், உள்நாட்டு ஏர் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ சேவைகள் தவிர பயணிகளுக்கான அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணங்கள்
  • மெட்ரோ ரயில் சேவைகள்
  • பள்ளி / கல்லூரிகள் / கல்வி நிறுவனங்கள் / பயிற்சி / கோச்சிங் மையங்கள்
  • சுகாதாரத்துறை/காவல்துறை/அரசு அதிகாரிகள்/சுகாதாரத்துறை பணியாளர்கள்/வெளியூர் நபர்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தனிமை மையங்கள் மற்றும் பஸ், ரயில் நிலைய, விமான நிலைய கேன்டீன்கள் தவிர இதர ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் இதர விருந்தோம்பல் சேவைகள்.
  • மக்கள் அதிகம் கூடும் சினிமா அரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவைகள்,
  • சமூக /அரசியல் / பண்பாடு தொடர்பான கூட்டங்கள். மற்றும் பெரிய அளவிலான கூட்டங்கள்/ மத இடங்களுக்கு செல்லுதல் /பொது வழிபாட்டு தலங்களுக்குச் செல்லுதல்.

 

ஆனால் ஆன்லைன் / தொலைதூர கல்வி நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படலாம் மற்றும் ஊக்குவிக்கப்படலாம்:. வீடுகளுக்கு உணவுப்பொருட்கள் அனுப்ப உணவகங்களுக்கான சமையற் கூடங்கள் செயல்பட அனுமதிக்கலாம்.

 

விளையாட்டு நடவடிக்கைகளைத் துவக்குவது

 

விளையாட்டு அரங்குகள் மற்றும் ஸ்டேடியங்கள் திறக்க அனுமதிக்கப்படும்.. ஆனால் இந்த வளாகங்களில், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

 

கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள்

 

மக்கள் நடமாட்டத்துக்கு உதவும் வகையில், பலவிதமான போக்குவரத்து நடவடிக்கைகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம், 11.05.2020ம் தேதி பிறப்பித்த உத்தரவுப்படி தனி நபர்கள் ரயிலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரை வெளியேற்றுதல்,வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் திரும்புவது, இந்திய மாலுமிகள் பணிக்குச் செல்வது மற்றும் பணியில் இருந்து திரும்புவது, மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்குள் சிக்கிய நபர்களை பஸ் மற்றும் ரயில் மூலம் கொண்டு செல்லுதல் ஆகியவை தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

 

மாநிலங்களுக்கு இடையேயான வாகன மற்றும் பஸ் போக்குவரத்து

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பரஸ்பர அனுமதியுடன் அனுமதிக்கப்படும். மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் வாகனம் மற்றும் பஸ் போக்குவரத்தை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்யலாம்.

கோவிட்-19 மேலாண்மைக்கான தேசிய அளவிலான உத்தரவுகள்

கோவிட்-19 மேலாண்மைக்கு தேசிய அளவில் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல் விதிமுறைகள், பொது இடங்களுக்கும் மற்றும் பணியிடங்களுக்கும் பொருந்தும்.

இந்த வழிகாட்டுதல்களின் கீழ் முக கவசம் அணிவது கட்டாயம்; எச்சில் துப்புவதற்கு சட்டப்படி, மாநில / யூனியன் பிரதேச விதிமுறைகள்படி அபராதத்துடன் கூடிய தண்டனை. பொது இடங்கள் மற்றும் வாகனங்களில் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூட்டம் சேரக் கூடாது. இறப்பு / இறுதிசடங்குகளில் அதிகபட்சம் 20 பேர் கலந்து கொள்ளலாம். பொது இடங்களில் மது, பான், குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்த அனுமதி இல்லை.

பணி செய்யும் இடங்களில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்வதையும் தேசிய அளவிலான உத்தரவுகள் நிர்ணயிக்கிறது. முடிந்த அளவு வீட்டில் இருந்தே பணியாற்றுவதைப் பின்பற்ற வேண்டும். அதற்கேற்ப அனைத்து அலுவலகங்களிலும் பணி நேரங்களைப் பின்பற்ற வேண்டும். பொது பகுதிகள், நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் உடல்வெப்ப பரிசோதனை, கை கழுவுதல், சானிடைசர் வசதிகள் செய்ய வேண்டும். பணியாற்றும் இடங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். வேலை செய்யும் நபர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். வேலை நேரம், உணவு இடைவேளை ஆகியவற்றுக்கு இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும்.

 

கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளுக்கான கட்டுப்பாடுகள்

கடைகள் மற்றும் மார்க்கெட்டுகள் குறிப்பிட்டநேரத்தில் திறக்கப்படுவதை உள்ளூர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இடையே சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். ஒரு கடையில் 5 பேருக்குமேல் இருக்க கூடாது.

இரவு ஊரடங்கு

இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தேவையற்ற நடவடிக்கைகளுக்கும், தனிநபர் நடமாட்டத்துக்கும் விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.

பாதிக்கப்படக் கூடியவர்களுக்கான பாதுகாப்பு

பாதிக்கப்படக்  கூடிய நபர்கள், உதாரணத்துக்கு அத்தியாவசிய மற்றும் மருத்துவசேவைகளுக்கு வெளியே செல்வதை தவிர 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், உடல்நலப் பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் வீட்டில் இருக்க வேண்டும்.

தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் தவிர அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி

வழிகாட்டு விதிமுறைகளின் கீழ் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் தவிர

மற்ற அனைத்து நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படும். ஆனால், கட்டுப்படுத்தல் மையங்களில், ஏற்கனவே குறிப்பிட்டபடி அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

மண்டலங்களில் மாநிலங்கள் முடிவு செய்யும் நடவடிக்கைகள்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிலைமைக்குத் தகுந்தபடி, பல மண்டலங்களில் சில நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்.

ஆரோக்கிய சேது பயன்பாடு

  • கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்ட நபர்களை அல்லது பாதிப்பு அபாயம் உள்ள நபர்களை விரைவில் அடையாளம் காண்பதிலும், தனிநபர்களையும், சமுதாயத்தையும் பாதுகாப்பதிலும்மத்திய அரசு உருவாக்கிய ஆரோக்கிய சேது மொபைல் செயலி சக்திவாய்ந்த உபகரணம். பணிசெய்யும் இடங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய, மொபைல் போன் பயன்படுத்தும் அனைத்து ஊழியர்களும் ஆரோக்ய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்வதை வேலையளிக்கும் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். மொபைல் போன் பயன்படுத்துவோர் ஆரோக்ய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்யும்படி மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் மற்றும் சுகாதார தகவல்களை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம் பாதிப்பு அபாயம் உள்ளவர்களுக்கு சரியான நேரத்தில் மருத்துவ வசதி செய்து கொடுக்க முடியும். வழிகாட்டு விதிமுறைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து கடுமையாக அமல்படுத்த வேண்டும். பேரிடர் நிர்வாகச் சட்டம் 2005-ன் கீழ் வழங்கப்பட்ட இந்த விதிமுறைகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் எந்த விதத்திலும் நீர்த்துப்போக செய்யக் கூடாது.

******(Release ID: 1624902) Visitor Counter : 387