உள்துறை அமைச்சகம்

நிதியமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் கிராமப்புறப் பொருளாதாரம் மற்றும் கட்டமைப்புகளுக்கு உத்வேகம் அளித்து, கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்: உள்துறை அமைச்சர்.

Posted On: 17 MAY 2020 4:20PM by PIB Chennai

இன்று வெளியிடப்பட்ட பொருளாதாரத் திட்டங்களின் தொகுப்புகளின் அறிவிப்புகளுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி, நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். ``மோடி தலைமையிலான அரசு இன்று வெளியிட்ட அறிவிப்புகள், தற்சார்பு இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுகாதாரம், கல்வி மற்றும் தொழில் துறைகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதாக இந்த நடவடிக்கைகள் அமைந்து, கோடிக்கணக்கான ஏழைகளுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும்'' என்று அவர் கூறியுள்ளார்.

கிராமப்புற இந்தியாவுக்கான ஒதுக்கீடு பற்றி குறிப்பிட்டுள்ள திரு அமித்ஷா, ``மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பது, ஏழைகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதுடன், நீடித்த பயன்தரும் வாழ்வாதார சொத்துகளை உருவாக்கவும் உதவிகரமாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார். நமது கிராமப்புறப் பொருளாதாரம் மற்றும் கட்டமைப்புகளுக்கு அதிக உத்வேகம் தருவதாக இது இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்-19 நோய்த் தாக்குதல் சூழ்நிலையைத் திறமையாகக் கையாள்வதாக பிரதமர் திரு மோடியின் தலைமைக்கு உள்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். பல்வேறு வளர்ச்சியடைந்த நாடுகளைவிட இந்தியாவின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக அவர் கூறினார். ``எதிர்காலத்தில் இதுபோன்ற எந்தவொரு பெரிய நோய்த் தாக்குதலையும் சமாளிக்கக் கூடிய திறன் கொண்ட இந்தியாவை உருவாக்க பிரதமர் உறுதிபூண்டுள்ளார். அதற்கேற்ப இந்தியாவின் சுகாதாரத் துறையை பலப்படுத்தி, புதுப்பித்து வருகிறார். தொற்றுந் தன்மையுள்ள நோய்களுக்கான மருத்துவமனை வளாகங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்குவதற்காக இந்தியாவின் சுகாதாரத் துறை செலவினத்தை அதிகரிக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மருத்துவப் பரிசோதனை ஆய்வகக் கட்டமைப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு, ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்படும். தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய இந்தத் திட்டம், மருத்துவத் துறையில் இந்தியாவை பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என்று அவர் கூறியுள்ளார்.

பொதுத் துறை நிறுவனங்களுக்கான கொள்கையை மாற்றி அமைக்கும் முடிவு,  ஐ.பி.சி. தொடர்பான நடவடிக்கைகள் மூலம் தொழில் செய்யும் எளிதான சூழ்நிலையை மேம்படுத்துவதற்காக கம்பெனிகள் சட்டத்தில் தண்டனைக்குரிய பிரிவுகளை நீக்குதல் செயல்பாடுகளில் கவனம் செலுத்துதல் பற்றிக் குறிப்பிட்ட அவர், தற்சார்பு இந்தியா என்ற பிரதமர் மோடியின் எதிர்கால லட்சிய நோக்கையும், உறுதிப்பாட்டையும் பிரதிபலிப்பதாக இதுபோன்ற முடிவுகள் இருப்பதாகக் கூறினார்.

மாநிலங்களின் கடன் வரம்பை அதிகரிக்க மோடி அரசு முடிவு செய்திருப்பதால், கூடுதலாக ரூ.4.28 லட்சம் கோடி ஆதார வளங்கள் கிடைக்கும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். மாநிலங்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள நிதிகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள அவர், ஏப்ரல் மாதத்தில் வரிகளைப் பரவலாக்கம் செய்வது மூலமாக மத்திய அரசு முன்னர் ரூ.46,038 கோடி வழங்கியுள்ளது; வருவாய்ப் பற்றாக்குறை மானியம் ரூ. 12,390 கோடி; மற்றும் மாநில பேரிடர் காப்பு நிதி யான (State Disaster Response Fund - SDRF),எஸ்.டி.ஆர்.எப். நிதியில் ரூ. 11,000 கோடி வரை வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.



(Release ID: 1624726) Visitor Counter : 158