பாதுகாப்பு அமைச்சகம்

ஆபரேஷன் சமுத்திர சேது - இந்திய கடற்படைக் கப்பல் ஜலாஷ்வா இரண்டாம் கட்டத்திற்காக மாலத்தீவுக்குத் திரும்புகிறது

Posted On: 14 MAY 2020 6:15PM by PIB Chennai

இந்திய நாட்டினரை வெளிநாட்டிலிருந்து கடல் வழியாக திருப்பி அழைத்துவரும் சமுத்திரசேதுவின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்க, இந்திய கடற்படைக் கப்பல் ஜலாஷ்வா மாலத்தீவின்  மாலே நகரத்திற்கு திரும்புகிறது. இந்த கப்பல் மே 15 ஆம் தேதி அதிகாலையில் மாலே துறைமுகத்திற்குள் நுழைந்து மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள இந்திய குடிமக்களின் பயணத்தைத் தொடங்கும். தனது இரண்டாவது பயணத்தில், இந்திய கடற்படைக் கப்பலான ஜலாஷ்வா மே 15 இரவு, 7.00 மணிக்கு இந்திய குடிமக்களை கொச்சிக்கு ஏற்றிச்செல்ல திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, மே 12 அன்று 698 இந்திய நாட்டினரை வெற்றிகரமாக கொச்சிக்கு அழைத்து வந்த பின்னர், இந்திய கடற்படைக் கப்பலான ஜலாஷ்வா இந்தியர்களை அழைத்து வரும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தை நோக்கி ஆயத்த நடவடிக்கைகளுக்கு முன்னேறியது, இதில் கிருமி நீக்கம் மற்றும் சுத்திகரிப்பு பணிகள் அடங்கும், அதிலும் குறிப்பாக, முன்னர் அழைத்து வரப்பட்ட குடிமக்கள் கப்பலில் தங்கியிருந்த பகுதிகள் சிறப்பு கவனம் கொண்டு சுத்திகரிக்கப்பட்டது.

இந்த கப்பல் மாலத் தீவில் நங்கூரமிடப்பட்டு, மே 15 ஆம் தேதி இரண்டாவது கட்டமாக இந்திய நாட்டினரின் மீட்புப் பயணத்தை மேற்கொள்ளும், இதில் 100 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 700 இந்தியர்கள் திருப்பி அழைத்து வரப்படுவார்கள். வெளியேற்றத்திற்காக பதிவு செய்த இந்திய பிரஜைகள் மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்படுவதுடன் அவர்களின் பொருட்கள் கப்பலில் ஏறுவதற்கு முன்பு சுத்தம் செய்யப்படும்.

*****


(Release ID: 1624053) Visitor Counter : 244