நிதி அமைச்சகம்

கொவிட்-19க்கு எதிரான இந்தியப் பொருளாதாரத்தின் போரை ஆதரிக்க, தொழில்கள், குறிப்பாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, நிவாரணம் மற்றும் கடன் ஆதரவு தொடர்பான நடவடிக்கைகளை நிதி அமைச்சர் அறிவித்தார்.

Posted On: 13 MAY 2020 6:39PM by PIB Chennai

 

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு சமமான ரூ 20 இலட்சம் கோடி மதிப்பில் விரிவான சிறப்புப் பொருளாதாரத் தொகுப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். ஆத்ம நிர்பார் பாரத் அபியான் எனப்படும் சுய-சார்பான இந்தியா இயக்கத்துக்கு அவர் அறைகூவல் விடுத்தார். பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அமைப்பு, துடிப்பான மக்கள் மற்றும் தேவை ஆகிய சுய-சார்பான இந்தியாவின் ஐந்து தூண்களையும் அவர் குறிப்பிட்டார்.

 

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மத்திய நிதிபெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சர், திருமதி. நிர்மலா சீதாராமன், நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நேற்று ஆற்றிய உரையில், விரிவான இலட்சியத்தை வகுத்துள்ளதாக தனது முன்னுரையில் தெரிவித்தார். கொவிட்-19க்கு எதிரான போருக்கான பொருளாதாரத் தொகுப்பில் விரிவான ஆலோசனையில் இருந்து பெறப்பட்ட உள்ளீடுகள் இடம் பெறுவதைக்  குறிப்பிடத்தகுந்த நேரத்தை செலவழித்து பிரதமரே உறுதி செய்தார் என்று அவர் மேலும் கூறினார்.

 

"சுய-சார்பான இந்தியாவைக் கட்டமைப்பதே அடிப்படை இலட்சியம் என்பதால், இந்தப் பொருளாதாரத் தொகுப்பு ஆத்ம நிர்பார் பாரத் அபியான் என்று அழைக்கப்படுகிறது," என்று அவர் கூறினார். ஆத்ம நிர்பார் பாரத் அபியானைக் கட்டமைப்பதற்கான தூண்களைப் பற்றி குறிப்பிட்ட திருமதி. நிர்மலா சீதாராமன், நிலம், தொழிலாளர்கள், நிதி ஓட்டம் மற்றும் சட்டம் ஆகியவற்றின் மீது நமது கவனம் இருக்கும் என்றார்.

 

பத்திரிகையாளர் சந்திப்பில் செய்யப்பட்ட முக்கிய அறிவிப்புகள்:

 

* சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்களுக்கு ரூ 3 லட்சம் கோடி அவசர பணி மூலதன வசதி.

* அழுத்தத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ 20,000 கோடி துணைக் கடன்.     

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிதியத்தின் நிதி மூலம் ரூ 50,000 கோடி பங்கு உட்செலுத்துதல்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய விளக்கம் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இதர நடவடிக்கைகள்.

* ரூ 200 கோடி வரையிலான அரசு ஏலங்களுக்கு சர்வதேச ஏலங்கள் நடத்தப்பட மாட்டாது.

* ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு 2020 ஆகிய அடுத்த 3 மாதங்களுக்கு தொழில்கள் மற்றும் அமைப்பு சார்ந்த பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி ஆதரவு நீட்டிப்பு.

* வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இணைந்துள்ள அனைத்து நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதிப் பங்களிப்பு.    

* வங்கி சார நிதி நிறுவனங்கள்/வீட்டுக் கடன் நிறுவனங்கள்/சிறு கடன் நிறுவனங்களுக்கு ரூ 30,000 கோடி சிறப்பு நிதித் திட்டம்.

* வங்கி சார நிதி நிறுவனங்கள்/ சிறு கடன் நிறுவனங்களின் கடன்களுக்கு ரு 45,000 கோடி பகுதி கடன் உத்தரவாதத் திட்டம் 2.0.

* மின்சார விநியோக நிறுவனங்களுக்கு ரூ 90,000 கோடி நிதி உட்செலுத்துதல்.

* பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC) மற்றும் சலுகை ஒப்பந்தங்கள் உள்ளிட்ட ஒப்பந்தப் பொறுப்புகளை முடிக்க ஆறு மாதங்கள் வரை கால நீட்டிப்பு வழங்கி ஒப்பந்ததாரர்களுக்கு நிவாரணம்.

* ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு நிவராணம்- பதிவு செய்த அனைத்துத் திட்டங்களுக்கும் பதிவு மற்றும் பணி முடிப்புத் தேதி ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு.

* தொழில்களுக்கு வரி நிவாரணம்- தொண்டு நிறுவனங்கள், பெரு நிறுவனம் அல்லாத தொழில்கள் மற்றும் இதர தொழில்களுக்கு நிலுவையில் உள்ள வருமான வரி திரும்ப செலுத்த வேண்டியத் தொகை உடனடியாக வழங்கப்படும்.

* 2020-21 நிதி ஆண்டின் மிச்சமுள்ள காலகட்டத்துக்கு TDS மற்றும் TCS ஆகிய வரி பிடித்த விகிதங்களில் 25% குறைப்பு.

* வரி தொடர்பான பல்வேறு செயல்பாடுகளுக்கு காலக்கெடு நீட்டிப்பு.

 

மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1623601

 


(Release ID: 1623814) Visitor Counter : 455