பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மோடி அரசு தனது பணியாளர்களின் நலன் பேண உறுதி பூண்டுள்ளது; அவர்களுடைய குறைகளுக்கு நியாயமான முறையில் தீர்வு காணப்படும்: டாக்டர் ஜிதேந்திர சிங்.

Posted On: 13 MAY 2020 4:08PM by PIB Chennai

வடகிழக்கு: மண்டல மேம்பாடு, பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளுக்கான மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training DoPT), நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை (Department of Administrative Reforms and Public Grievances – DARPG) , ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலன் துறை (Department of Pension & Pensioners Welfare DoPPW)  ஆகிய மூன்று துறைகளைச் சேர்ந்த முதல் பிரிவு அதிகாரிகள் நிலையிலான அதிகாரிகள் வரையிலான பணியாளர்களுடன் காணொளி மாநாட்டின் மூலம் உரையாடினார். கோவிட் பெருந்தொற்று நோய்க் காலத்தில், இது போன்ற ஒரு நிகழ்வு நடப்பது இதுவே முதன் முறையாகும்.

 

மோடி அரசு தனது பணியாளர்கள் நலன் பேண எப்போதும் உறுதிபூண்டுள்ளது; அதிக அளவிலான உணர்வுப்பூர்வமான முறையில், அவர்கள் நலனில் எப்போதும் அக்கறை செலுத்துகிறது என்றும் டாக்டர் சிங் கூறினார். கோவிட்-19  நெருக்கடி காலத்தின் போது இல்லத்திலிருந்து பணிபுரிய வேண்டும் என்ற ஆணையைப் பின்பற்றி, 33 சதவிகிதம் பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வருகிறார்கள்; மற்றவர்கள் இல்லத்திலிருந்து பணிபுரிகிறார்கள் என்றும், இதுவே பணியாளர்களுக்கான நட்பார்ந்த சூழல் நிலவுவதற்கான மிகப்பெரிய சான்று என்று அவர் கூறினார். கடினமான இந்த காலகட்டத்தில், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்ற பணியாளர்களுக்கு பிரச்சினைகள் எதுவும் வராத வகையில், முன்னணியில் இருந்து வழிகாட்டுகிறார்கள் என்று அவர் கூறினார். துறைகளுக்கான பணிகளின் ஆக்கஅளவு அதிகரித்துள்ளது என்பது குறித்து திருப்தி தெரிவித்த அவர், பணி கலாச்சாரம் எங்கும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

 

பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, பதவி உயர்வு உட்பட பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் குறைகள் குறித்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் டாக்டர் கஜேந்திர சிங் உறுதியளித்தார். இந்த ண்டு ஜனவரி மாதம்  400க்கும் மேற்பட்ட பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.(Release ID: 1623583) Visitor Counter : 18