உள்துறை அமைச்சகம்

ரயில்கள் மூலமாக ஏற்றிச் செல்லப்படும் பயணிகளின் நடமாட்டத்திற்கு வசதி செய்து தரும் வகையில் நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை (SOP) மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது

Posted On: 11 MAY 2020 2:41PM by PIB Chennai

ரயில்கள் மூலமாக ஏற்றிச் செல்லப்படும் பயணிகளின் நடமாட்டத்திற்கு வசதி செய்து தரும் வகையில் நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை (Standard Operating Protocol - SOP) மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

உறுதிசெய்யப்பட்ட e பயணச்சீட்டு இருந்தால் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் வந்து செல்ல முடியும். அனைத்து பயணிகளுக்கும் கண்டிப்பாக மருத்துவ பரிசோதனை செய்யப்படும். கோவிட்-19 நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். ரயில் பயணத்தின் போதும் ரயில் நிலையங்களிலும், தனி நபர் விலகியிருத்தல் மற்றும் சுகாதார தூய்மை விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.

 

ரயிலில் ஏறும் போதும், ரயில் நிலையங்களில் உள்ளே நுழையும் போதும், ரயில் நிலையங்களிலிருந்து வெளியேறும் போதும், ரயில் பெட்டிகளில் இருக்கும்போதும் பயணிகளுக்கு கை சுத்திகரிப்பான் வழங்கப்படும். ரயில் நிலையங்களுக்குள் நுழையும் போதும், ரயில் பயணத்தின் போதும், அனைத்து பயணிகளும் முகக்கவசங்களை அணிந்துகொள்வது உறுதி செய்யப்படும். பயணிகள் அவரவரது மாநிலங்களுக்குச் சென்றடையும் போது, அந்தந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் வகுத்துள்ள சுகாதார விதிமுறைகளை, கடைப்பிடிக்க வேண்டும்.

 

ரயில்கள் இயங்குவது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பிறகு, மத்திய ரயில்வே அமைச்சகம் படிப்படியாக அனுமதி வழங்கும்.

 

மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள அதிகாரபூர்வ தகவலை இங்கே காணலாம்.https://static.pib.gov.in/WriteReadData/userfiles/MHA%20Order%20Dt.%2011.5.2020%20on%20SOP%20for%20movement%20of%20persons%20by%20trains.pdf



(Release ID: 1622987) Visitor Counter : 229