மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கொவிட்-19 தொடர்பான கேள்விகள், குறைகள் மற்றும் கல்வித் சார்ந்த இதர விஷயங்களைக் கண்காணிக்க பல்கலைக்கழக மானியக் குழு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

Posted On: 11 MAY 2020 12:14PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, தேர்வுகள் மற்றும் கல்வி நாள்காட்டி தொடர்பான வழிகாட்டுதல்களை 29 ஏப்ரல், 2020 அன்று  பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, வழிகாட்டுதல்களை அமல்படுத்திப் பின்பற்றும் அதே வேளையில், அனைத்து பங்குதாரர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, தொடர்புடைய அனைவரின் சுகாதாரத்துக்கு உச்சபட்ச முன்னுரிமை அளித்து கல்வி செய்ல்பாடுகளை திட்டமிடுமாறு அனைத்து பல்கலைக்கழங்களும் அறிவுறுத்தப்பட்டன.

 

பெருந்தொற்றின் காரணமாக ஏற்படும் தேர்வுகள் மற்றும் இதர கல்விச் செயல்பாடுகள் குறித்த மாணவர்களின் குறைகளைக் கையாள ஒரு பிரிவை ஏற்படுத்துமாறும், அது குறித்து மாணவர்களுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் பல்கலைக்கழகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.

 

மேலும், கொவிட்-19  பெருந்தொற்றின் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ள கேள்விகள், குறைகள் மற்றும் கல்வித் சார்ந்த இதர விஷயங்களைக் கண்காணிக்க பல்கலைக்கழக மானியக் குழு கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது:

 

1. 011-23236374 என்ற பிரத்யேக உதவி எண் தொடங்கப்பட்டுள்ளது.

2. covid19help.ugc[at]gmail[dot]com என்னும் மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.

3. மாணவர்களின் குறைகளைக் களைவதற்காக ஏற்கனவே உள்ள   பல்கலைக்கழக மானியக் குழுவின் https://www.ugc.ac.in/grievance/student_reg.aspx என்ற வலைதளத்திலும் மாணவர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம்.

4.  மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கவலைகள்/குறைகளைக் கண்காணித்து அவற்றுக்குத் தீர்வு காண பல்கலைக்கழக மானியக் குழுவில் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் பொது அறிவிப்பின் ஒரு நகலை தங்கள் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் பதிவேற்றி, மின்னஞ்சல் மற்றும் இதர டிஜிட்டல் ஊடகம் மூலமாக இதை ஆசிரியர் மற்றும் மாணவர் சமூகங்களிடையே பகிருமாறு அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.



(Release ID: 1622902) Visitor Counter : 212