சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 தொற்று பாதிப்புகளை தடுக்க மாநிலங்களுக்கு மத்தியக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

Posted On: 09 MAY 2020 9:04PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் பாதிப்புகள் உருவாகிக் கொண்டிருக்கும் நோயாளிகள் மற்றும் பரவல் அதிகம் உள்ள 10 மாநிலங்களுக்கு மத்தியக் குழுக்களை அனுப்ப முடிவு செய்தது. இந்த குழுவினர் கோவிட்-19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநிலங்களின் சுகாதாரத் துறைக்கு உதவும்.

இந்த குழுவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் ஒரு மூத்த அதிகாரி, இணைச் செயலாளர் அளவிலான சட்ட அதிகாரி மற்றும் ஒரு பொது சுகாதார நிபுணர் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள். சம்பந்தப்பட்ட மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்தந்த மாவட்டங்கள் / நகரங்களுக்குள்ளாகவே கட்டுப்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளில் இக்குழுவினர் மாநில சுகாதாரத் துறையினருக்கு உதவுவார்கள். இக்குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மாநிலங்கள் பின்வருமாறு:

1. குஜராத்

2. தமிழ்நாடு

3. உத்தரப்  பிரதேசம்

4. டெல்லி

5. ராஜஸ்தான்

6. மத்தியப் பிரதேசம்

7. பஞ்சாப்

8. மேற்குவங்கம்

9. ஆந்திரா

10. தெலங்கானா

இதுதவிர ஏற்கனவே பொது சுகாதார நிபுணர்களை கொண்ட 20 மத்திய குழுவினர், அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் மேலாண்மையில் உதவ, சமீபத்தில் ஒரு உயர்நிலைக் குழு மும்பைக்கு அனுப்ப வைக்கப்பட்டது.(Release ID: 1622633) Visitor Counter : 154