பாதுகாப்பு அமைச்சகம்

“கொரோனா போராளிகளுக்கு இராணுவப் படையினரின் மரியாதை” செய்கைகளுக்கு இராணுவப் படையினருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு

Posted On: 03 MAY 2020 7:33PM by PIB Chennai

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தொடர்ந்து போராடி வரும் கொரோனா போராளிகளுக்கு வணக்கம் செலுத்துவதற்காக நிலத்திலும், நீரிலும், வானிலும் நாட்டின் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான செயல்பாடுகளை நிகழ்த்தியதற்காக இராணுவப் படையினரின் முயற்சிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

“உலக அளவிலான இந்த தொற்று நோய்க்கு எதிராகப் போராடி வரும் கொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இராணுவப் படையினர் இன்று பல்வேறு செயல்களை நிகழ்த்தினர். கோவிட் 19 தொற்றுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டுள்ள போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தார்மீக ரீதியில் மன வலிமையூட்டும் வகையில், பாராட்டத்தக்க பணியை முன்னணி வீரர்கள் செய்து வருகின்றனர்” என்றும் அவர் கூறினார்

மருத்துவர்கள் காவல்துறையினர் மற்றும் இதர முன்னணிப் போராளிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்ட சிறப்பு முயற்சிகளை எடுத்த இராணுவப் படையினருக்கு திரு ராஜ்நாத்சிங் நன்றி தெரிவித்தார். தற்போதைய சவாலான சூழ்நிலையில், ஒட்டுமொத்த தேசமும் ஒற்றுமையாக இணைந்து நிற்கிறது என்றும் அவர் கூறினார்.

இராணுவப் படை, கடற்படை மற்றும் இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோரக் காவல்படை பல மருத்துவமனைகளிலும் மரியாதை செலுத்தியதைக் கண்ட, பல மாநகராட்சிகள், பெரிய மற்றும் சிறிய நகரங்களில், டில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, போபால், அமிர்த்சர், பெல்காம் இராணிக்கெட் பிதொராகர் ஆகியவையும் அடங்கும்.(Release ID: 1620854) Visitor Counter : 153