சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பிவைப்பு

Posted On: 03 MAY 2020 8:46PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட 20 மத்திய பொது சுகாதாரக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ள 20 மாவட்டங்களுக்கு இந்தக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களைக் காணலாம்:

  1. மும்பை, மகாராஷ்டிரா
  2. அகமதாபாத், குஜராத்
  3. தில்லி (தென்கிழக்கு)
  4. இந்தூர், மத்தியபிரதேசம்
  5. புனே, மகாராஷ்டிரா
  6. ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
  7. தானே, மகாராஷ்டிரா
  8. சூரத், குஜராத்
  9. சென்னை, தமிழ்நாடு
  10. ஹைதராபாத், தெலங்கானா
  11. போபால், மத்தியபிரதேசம்
  12. ஜோத்பூர், ராஜஸ்தான்
  13. தில்லி (மத்திய)
  14. ஆக்ரா, உத்தரப்பிரதேசம்
  15. கோல்கட்டா, மேற்குவங்கம்
  16. கர்னூல், ஆந்திரபிரதேசம்
  17. வதோதரா, குஜராத்
  18. குண்டூர், ஆந்திரபிரதேசம்
  19. கிருஷ்ணா, ஆந்திரபிரதேசம்
  20. லக்னோ, உத்தரபிரதேசம்

இந்த மாவட்டங்கள் / நகரங்களுக்குள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு இந்தக் குழுக்கள் ஆதரவு அளிக்கும். மாநில அரசுகளுக்கும் உதவி செய்யும்.

*****


(Release ID: 1620850) Visitor Counter : 254