மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கான மாற்று கல்வி நாள் காட்டியை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் தில்லியில் வெளியிட்டார்
Posted On:
02 MAY 2020 6:39PM by PIB Chennai
ஒன்பதாவது மற்றும் பத்தாவது உயர்நிலை வகுப்புகளுக்கான, மாற்று கல்வி நாள் காட்டியை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர், திரு. ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்', புது தில்லியில் இன்று வெளியிட்டார்.
அப்போது பேசிய அமைச்சர் மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் வீட்டிலிருந்தே பயன்படுத்தும் வகையில், கல்வியை வேடிக்கை நிறைந்த வகையில் கற்றுக்கொடுக்க உதவும் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் சமுக ஊடக கருவிகளை பயன்படுத்துவதை பற்றிய வழிகாட்டுதல்களை இந்த நாள் காட்டியை ஆசிரியர்களுக்கு அளிப்பதாக தெரிவித்தார். அதே சமயம், கைபேசி, வானொலி, தொலைக்காட்சி, குறுந்தகவல் சேவை மற்றும் பல்வேறு சமூக ஊடகங்களின் மாறுபட்ட நுழைவு அளவுகளை இது கருத்தில் கொண்டிருக்கிறது.
பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான மாற்று கல்வி நாள் காட்டியை மற்றும் பாடப் பகுதிகள் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். மற்றுத் திறனாளி குழந்தைகள் (சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகள்) உட்பட அனைத்து குழந்தைகளின் தேவைகளையும் இந்த நாள் காட்டி பூர்த்தி செய்யும் என்று அவர் மேலும் கூறினார். ஒலிப் புத்தகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், காணொலி நிகழ்ச்சி ஆகியவற்றுக்கான சுட்டியும் இதில் சேர்க்கப்பட்டிருக்கும்.
பாடத்திட்டம் அல்லது பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட கருப்பொருள்/அத்தியாயத்துக்கு தொடர்புடைய சுவாரசியமான மற்றும் சவாலான செயல்களைக் கொண்ட வாரத் திட்டம் இந்த நாள் காட்டியில் இருப்பதாக திரு. பொக்ரியால் கூறினார். முக்கியமாக, கருப்பொருளை கற்றல் வெளிப்பாடுகளோடு இது இணைக்கிறது.
ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான மாற்று கல்வி நாள் காட்டியை ஆங்கிலத்தில் காண இங்கு சொடுக்கவும்:
ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான மாற்று கல்வி நாள் காட்டியை இந்தியில் காண இந்த இணைப்பை தொடர்பு கொள்ளவும்:
***
(Release ID: 1620600)
Visitor Counter : 168
Read this release in:
Telugu
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam