ரெயில்வே அமைச்சகம்
பயணிகள் ரயில் சேவைகள் ரத்து நீட்டிப்பு
Posted On:
02 MAY 2020 12:45PM by PIB Chennai
கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்திய ரயில்வே-யின் அனைத்து பயணிகள் ரயில் சேவைகள் ரத்து நடவடிக்கையை, மே 17, 2020 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், பல்வேறு பகுதிகளிலும் தங்கியுள்ள இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, மாநில அரசுகளின் தேவைக்கு ஏற்ப இவை இயக்கப்படும்.
தற்போது இருப்பதைப் போன்றே, சரக்கு ரயில் சேவைகள் தொடரும்.
*******
(Release ID: 1620367)
Visitor Counter : 233
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam