வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ஆக்ரா பொலிவுறு நகரின் கோவிட்-19 குறித்த தகவல் தொகுப்பு

Posted On: 30 APR 2020 1:58PM by PIB Chennai

ஆக்ரா நகரத்தில் கோவிட்-19 வைரஸ் பரவல் குறித்த தகவல் தொகுப்பை (Dashboard) பொதுமக்களும் பார்த்து அறிந்து கொள்ளலாம் என நகராட்சி அண்மையில் அறிவித்துள்ளது. ஹாட் ஸ்பாட்கள், பரவல் வரைபடம், தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஆகிய தகவல்கள் தினமும் பதிவேற்றப்படும். இதனை பார்த்துத் தெரிந்துகொள்ள பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

தகவல் தொகுப்பை http://covid.sgligis.com/agra என்ற முகவரியில் பார்க்கலாம்.

தகவல் தொகுப்பின் முக்கிய அம்சமாக, drop menu-வைப் பயன்படுத்தும்போது, மாநகராட்சிக்கு உட்பட்ட எந்த வார்டிலும் கோவிட் வைரஸ் பரவலின் நிலை மற்றும் அதுதொடர்பான வரைபடங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியும். நகரின் வரைபடத்தில் குறிப்பிட்ட பகுதி வார்டை கிளிக் செய்தும் தகவல்களைப் பார்க்க முடியும். செயற்கைக்கோள் வரைபடம், சாலை வரைபடம் போன்ற வழிவகைகளைப் பயன்படுத்தியும் வரைபடங்களைப் பல விதங்களில் பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


(Release ID: 1619695) Visitor Counter : 179