உள்துறை அமைச்சகம்

கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக நாட்டில் சிக்கித்தவிக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட, மாநிலங்களுக்கிடையேயான மக்களின் பயணத்துக்கு மத்திய அரசு ஆதரவளிக்கிறது

Posted On: 29 APR 2020 6:25PM by PIB Chennai

கொவிட்-19 எதிர்த்துப் போரிட அமலில் உள்ள பொது முடக்கக் கட்டுப்பாடுகளின் காரணமாக, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் இதர மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள். தற்போது, இந்த சிக்கித் தவிக்கும் நபர்களின் சாலை வழிப் பயணத்தை மத்திய அரசு அனுமதித்துள்ளது. தொடர்புடைய மாநிலங்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு ஒத்துக்கொண்ட பின்னர், இவர்கள் ஒரு மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் இருந்து இன்னொரு மாநிலம்/யூனியன் பிரதேசத்துக்கு பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

அவர்கள் தங்களது இலக்குகளை அடைந்தவுடன், உள்ளூர் அதிகாரிகள் இவர்களை மதிப்பீடு செய்து, மருத்துவமனையில் தனிமைப்படுத்துதல் தேவைப்படாத பட்சத்தில், வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இவர்களுக்கு சுகாதாரப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.

இந்தக் காரணத்துக்காக, ஆரோக்ய சேது செயலியைப் பயன்படுத்த இந்த நபர்களை ஊக்கப்படுத்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் இவர்களின் சுகாதார நிலைமையைக் கண்காணித்துப் பின்தொடரலாம்.

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தை காண இங்கே சொடுக்கவும்:https://static.pib.gov.in/WriteReadData/userfiles/MHA%20Order%20on%2029.4.2020%20on%20Movement%20of%20Stranded%20persons.pdf


(Release ID: 1619351) Visitor Counter : 324