ரெயில்வே அமைச்சகம்

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, தனியார் வசமுள்ள உணவு தானிய (PFG) சரக்குகளின் போக்குவரத்து, பொது முடக்கத்தின் போது மிகவும் அதிகரித்தன.

Posted On: 29 APR 2020 5:51PM by PIB Chennai

இந்திய இல்லங்களில் உள்ள அனைத்து சமையல் அறைகளும் தொடர்ந்து இயல்பாக இயங்குவதை உறுதி செய்வதற்காக, 7.75 இலட்சம் டன்களுக்கும் (303 அடுக்குகள்) அதிகமான தனியார் உணவுதானியங்களின் (PFG) சரக்குகள், 25 மார்ச் முதல் 28 ஏப்ரல் 2020 வரையிலான பொது முடக்கக் காலத்தில் நாடு முழுவதும் எடுத்து செல்லப்பட்டன. கடந்த ஆண்டு இதே சமயத்தில் இந்த எண்ணிக்கை 6.62 இலட்சம் டன்களாக (243 அடுக்குகள்) இருந்தது. தனியார் உணவுதானிய சரக்குகளின் போக்குவரத்து அதிகரிப்பைப் பொறுத்த வரை, ஆந்திர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகியவை முன்னணி மாநிலங்களாக இருக்கின்றன.

கொவிட்-19 காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொது முடக்கத்தின் போது உணவு தானியங்கள் போன்ற வேளாண் பொருள்களை சரியான நேரத்தில் ஏற்றிச் செல்லவும், சரியான நேரத்தில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யவும் இந்திய ரயில்வே அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இந்த அத்தியாவசியப் பொருள்களை வண்டிகளில் ஏற்றுதல், அவற்றை எடுத்துச் செல்லுதல் மற்றும் இறக்கி வைத்தல் ஆகியவை பொது முடக்கத்தின் போது முழு வீச்சில் நடைபெறுகின்றன.

***


(Release ID: 1619344) Visitor Counter : 235