உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் விநியோகிக்கும் சேவையில் நாடெங்கிலும் 403 உதான் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 28 APR 2020 4:03PM by PIB Chennai

அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் விநியோகிக்கும் சேவையில்  நாடெங்கிலும் 403 உதான் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. உயிர்காக்கும் உதான் சேவையில் ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை, தனியார் விமானங்கள் ஆகியவற்றின் மூலம் 403 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 235 விமானங்கள் ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் நிறுவனங்களால் இயக்கப்பட்டன.

இதுவரை, 748.68 டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கொண்ட சரக்குப் போக்குவரத்து கையாளப்பட்டுள்ளது. இது நாள்வரை உயிர்காக்கும் உதான் விமானங்கள் 3,97,632 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வானில் பயணித்துள்ளன. கோவிட் 19 தொற்றுக்கு எதிராக நாடு மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக, நாட்டிலுள்ள தொலைதூரப் பகுதிகளுக்கு, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கொண்ட சரக்குப் போக்குவரத்தைக் கையாள்வதற்காக, இந்த உயிர்காக்கும் உதான் விமானங்கள், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மூலமாக இயக்கப்பட்டு வருகின்றன.


(வெளியீட்டு அடையாள எண்: 1618966) வருகையாளர் எண்ணிக்கை : 264
இந்த வெளியீட்டை படிக்க: English , Kannada , Assamese , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu