உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

கோவிட்-19 முடக்கநிலை காலத்தில் உயிர்காக்கும் உடான் விமான சேவைகள் மூலம் 684 டன்கள் அளவுக்கு அத்தியாவசிய மற்றும் மருந்து பொருள்கள் கையாளப்பட்டன

प्रविष्टि तिथि: 26 APR 2020 7:32PM by PIB Chennai

`உயிர்காக்கும் உடான்' விமான சேவைகளை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இயக்கி வருகிறது. கோவிட்-19 நோய்த் தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், தொலைதூரப் பகுதிகளுக்கு அத்தியாவசிய மற்றும் மருந்துப் பொருள்களைக் கொண்டு செல்வதற்காக இந்த விமானச் சேவைகள் இயக்கப்படுகின்றன. ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் இதுவரை 383 விமான சேவைகள் இயக்கப்பட்டன. அவற்றில் 223 விமான சேவைகள் ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் நிறுவனங்களால் இயக்கப்பட்டன. இதுநாள் வரையில் மொத்தம் 684.08 டன்கள் அளவுக்கு சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. மொத்தம் 3,76,952 கி.மீ. தொலைவுக்கு இந்த விமானச் சேவைகளில் பயணம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

பவான் ஹன்ஸ் மூலம் 2020 ஏப்ரல் 25 வரையில் 6,885 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் மேற்கொள்ளப்பட்டு 1.99 டன்கள் அளவுக்கு சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. பவான் ஹன்ஸ் லிமிடெட் உள்ளிட்ட ஹெலிகாப்டர் சேவைகள் ஜம்மு காஷ்மீர், லடாக், தீவுப் பகுதிகள் மற்றும் வடகிழக்குப் பகுதிகளுக்கு முக்கியமான மருந்துகளைக் கொண்டு செல்லவும், நோயாளிகளை அழைத்துச் செல்லவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வட கிழக்குப் பிராந்தியம், தீவுப் பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகளுக்கான சேவைகளுக்கு இதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.


(रिलीज़ आईडी: 1618615) आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada