சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

அதிகமான சரக்குப் போக்குவரத்தை நாடு முழுவதும் கையாளும் சரக்குந்து/பார வண்டி ஓட்டுநர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை எவை என்னும் இயங்குபட காணொளி விளக்கத்தை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டது

Posted On: 25 APR 2020 5:35PM by PIB Chennai

அத்தியாவசிய சரக்குப் போக்குவரத்தை நாடு முழுவதும் கையாளும் சரக்குந்து/பார வண்டி ஓட்டுநர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை எவை என்பதை விரிவாக விளக்கும் இயங்குபட காணொளி ஒன்றை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொவிட்-19 கட்டுப்படுத்தி உயிர்களைக் காப்பாற்ற அரசு பொது முடக்கத்தை நீட்டித்துள்ள சமயத்தில், அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்துகளை எடுத்து சென்று நமது வாழ்க்கையை எளிதாக்கப் பணிபுரியும் சரக்குந்து/பார வண்டி ஓட்டுநர்களை மதித்து அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று இந்த இயங்குபடம் மக்களைக் கேட்டுக்கொள்கிறது.

செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி, வரையப்பட்ட இயங்குபட முறையில், கருத்தை ஈர்க்கக்கூடிய வகையில் வழங்கப்பட்டிருக்கும் பட்டியல் இவ்வாறு கூறுகிறது:

நாவல் கொரோனா வைரஸ் நோயிலிருந்து (கொவிட்-19)

: பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

 

: பொது முடக்க சமயத்தில், அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்துகளின் விநியோகச் சங்கிலியைப் பராமரிக்கும் சரக்குந்து/பார வண்டி ஓட்டுநர்களை மதித்து அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

: உங்கள் பாதுகாப்புக்கான விதிகளை மதித்து உங்களையும் அடுத்தவர்களையும் காத்துக் கொள்ளுங்கள்.

செய்ய வேண்டியவை:

* தனிப்பட்ட சுகாதாரத்தைப் பராமரிக்கவும்

* முடிந்த போதெல்லாம் கைகளுக்கு சோப்பு போட்டு தண்ணீரில் குறைந்தது 20 விநாடிகளுக்குக் கழுவவும்

* வண்டியை ஓட்டும் போதும்/வெளியில் வரும் போதும் முகக்கவசத்தை அணியவும்.

* முகக்கவசத்தை உபயோகப்படுத்திய பிறகு, அதை சோப்பு போட்டு தண்ணீரில் கழுவி காய வைக்கவும்.

* கிருமி நாசினியை எப்போதும் உங்கள் வண்டியில் வைத்திருங்கள்.

* 70% ஆல்கஹால் கலந்துள்ள கிருமி நாசினியை வண்டியை ஓட்டும் போதும்/வெளியில் வரும் போதும் பயன்படுத்தவும்.

* விதிகளின் படி, ஓட்டுநர் மற்றும் உதவியாளர் தவிர கூடுதல் பயணிகளுடன் பயணிக்க வேண்டாம்.

* தனி நபர் இடைவெளியைக் கடைபிடிக்கவும்

* சோதனைச் சாவடிகள்/சரக்குகளை ஏற்றும்-இறக்கி வைக்கும் இடங்கள்/உணவகங்கள் ஆகிய இடங்களில் அடுத்தவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்

* தினம் தோறும் உங்கள் வண்டியில் கிருமி ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும்.

செய்யக்கூடாதவை:

* கிழிந்து போன/பழைய அல்லது அடுத்தவர்கள் உபயோகப்படுத்திய முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டாம்.

* ஒன்றுக்கு மேற்பட்ட உதவியாளரை உங்கள் வண்டியில் உங்களுடன் பயணிக்க அனுமதிக்க வேண்டாம்.

* சமுகக் கூடுதலில் ஈடுபட வேண்டும்.

* உங்கள் சுகாதாரத்தைப் புறக்கணிக்க வேண்டாம்.

வாருங்கள், நாம் அனைவரும் அடுத்தவர் நலனைப் பாதுகாத்து கொவிட்-19 பரவுதலில் இருந்து தடுத்து நிறுத்துவோம்.

***


(Release ID: 1618373) Visitor Counter : 223