ஆயுஷ்

ஆயுஷ் சுகாதார பிரிவுகளில் கோவிட் 19 தொற்று தீர்வுகளுக்கான தேடல்

Posted On: 24 APR 2020 12:10PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று நோய்த்தடுப்பிலும் சிகிச்சை மேலாண்மையிலும் ஆயுஷ் இடையீடுகள் / மருந்துகளின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்காக, குறுகிய கால ஆய்வு திட்டங்களை ஆதரிக்க ஒரு செயல்முறையை ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது.

வெளிப்புற (அதாவது, ஆயுஷ் அமைச்சக நிறுவனத்துக்கு வெளியில் இருந்து) ஆய்வு வகையின் கீழ் வரும் இந்த திட்டத்தில் பங்கு கொள்ள கோவிட்-19 பாதிப்புகளின் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள மருத்துவமனைகள் / நிறுவனங்கள் அழைக்கப்பட்டன. சார்ஸ்-கோவி-2 நோய்த்தொற்று மற்றும் கோவிட்-19 நோயின் தடுப்பு மற்றும் சிகிச்சை மேலாண்மையில் ஆயுஷ் இடையீடுகள் / மருந்துகளின் பங்கு மற்றும் தாக்கத்தை மதிப்பீடு செய்வது தொடர்பாகஇந்த திட்டங்கள் இருக்க வேண்டும்.

அதிகபட்சம் ஆறு மாத கால அளவு கொண்ட, நிறுவன நெறிமுறைகள் குழுவின் ஒப்புதல் உள்ள திட்ட முன்மொழிதல்களுக்கு, ஆயுஷ் மருத்துவர்களை ஈடுபடுத்துதல், தொழில்நுட்ப மனித ஆற்றல், ஆய்வக விசாரணைகள் மற்றும் தொடர்புடைய அவசரத் தேவைகளுக்காக ரூ. 10 லட்சம் வரை நிதி உதவிக்கு பரிசீலிக்கப்படும்.

தகுதி அளவுகோல்கள், விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை ஆயுஷ் அமைச்சகத்தின் வலைதளமான ayush.gov.in-இல் பதிவேற்றப்பட்டுள்ளன. https://main.ayush.gov.in/event/mechanism-support-short-term-research-projects-evaluating-impact-ayush-interventions-cum என்பது அந்த வலைப்பக்கத்துக்கான சுட்டி ஆகும்.

மின்னஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். emrayushcovid19[at]gmail[dot]com என்பது மின்னஞ்சல் முகவரி ஆகும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 01/05/2020



(Release ID: 1617786) Visitor Counter : 235