உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஆதரவு அளிக்க முழு ஆற்றலுடன் தொடர்ந்து பணியாற்றும் லைப்லைன் உதான் கொரோனா சேவகர்கள்
Posted On:
22 APR 2020 6:01PM by PIB Chennai
கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிராக இந்தியா மேற்கொண்டுள்ள பெரும் போராட்டத்திற்கு உதவும் வகையில், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களைக் கொண்டு செல்ல, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உள்நாட்டு விமானப் போக்குவரத்தான லைப்லைன் உதான் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதிகாரிகள், ஊழியர்கள், களப்பணியாளர்கள், தொடர்புடைய இதர நபர்கள் ஆகிய அனைத்து கொரோனா வீரர்களும் தொற்றுக்கு எதிராக முடிவற்ற ஆற்றலுடன் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை மற்றும் தனியார் நிறவுனங்களைச் சேர்ந்த லைப்லைன் உதானின் கீழ், 330 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 200 விமானங்கள் ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. இதுவரை, இந்த விமானங்கள் 551.79 டன் சரக்குகளை ஏற்றிச்சென்றுள்ளன. இந்த லைப்லைன் உதான் விமானங்கள் கடந்த தூரம் 3,27,623 கி.மீட்டர்.
(Release ID: 1617444)
Visitor Counter : 197