தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
அமைச்சகங்களை மூட எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை, பொய்யான செய்திகளின் உண்மைத்தன்மைகளை வெளியிடுகிறது பிஐபி
Posted On:
21 APR 2020 9:28PM by PIB Chennai
பொய்யான செய்திகள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின்கீழ், ஊடகங்களில் பரவிவரும் பல்வேறு பொய்யான செய்திகள் குறித்த தகவல்களை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (பிஐபி) உண்மை கண்டறியும் பிரிவு வெளியிடுகிறது.
காணொலிக்காட்சிக்கான செயலியின் பரிசோதனை முறையிலான பதிப்பை “சே நமஸ்தே” என்ற பெயரில் இந்திய அரசு தொடங்கியுள்ளதாகவும், இந்த செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் முதன்மையான இணைய செய்தி வலைதளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பிஐபி-யின் உண்மை கண்டறியும் பிரிவு விளக்கம் அளிக்கிறது. அதன்படி, இதுபோன்ற செயலியை அரசு தொடங்கவோ, செயலிக்கு ஒப்புதல் அளிக்கவோ இல்லை. இந்திய அரசின் ஒப்புதல் பெற்றது என்று கருதி, இதுபோன்ற செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
https://twitter.com/PIBFactCheck/status/1252603481136877568?s=20
தற்போதைய பொது முடக்கத்தின் காரணமாக, ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை குறைக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவிவருகிறது. இந்த செய்தி பொய்யானது என்று பிஐபி-யின் உண்மை கண்டறியும் பிரிவு வலியுறுத்துகிறது. இதுபோன்ற சம்பளக் குறைப்பு குறித்த எந்த பரிசீலனையையும் அமைச்சகம் மேற்கொள்ளவில்லை என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.
https://twitter.com/PIBFactCheck/status/1252541165083127813?s=20
அனைத்து அமைச்சகங்களையும் மூடுமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானதைப் போன்று, முகப்புப்படத்துடன் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், இதுபோன்று எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை. செய்தித் தொலைக்காட்சி பொறுப்புடன் அதனை சரிசெய்து செய்தி வெளியிட்டது.
https://twitter.com/PIBFactCheck/status/1252468471029395456?s=20
மாநில அளவில் பொய்யான செய்திகள் பரவுவதைத் தடுப்பதில், பிஐபி-யின் மண்டல அலுவலகங்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. முதன்மையான செய்தி வலைதளம் ஒன்றில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பால் வியாபாரியை ஹிமாச்சல பிரதேசத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. இதற்கு ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தின் உனா மாவட்ட ஆட்சியர் மறுப்புத் தெரிவித்து வெளியிட்ட கடிதத்துடன் ஷிம்லாவில் உள்ள பிஐபி பிரிவு டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
https://twitter.com/PIBShimla/status/1252191586567372801?s=20
பொது முடக்கத்தின் காரணமாக, உணவு கிடைக்காமல், பீகார் மாநிலத்தின் ஜெஹனாபாத் பகுதியில் குழந்தைகள் தவளைகளை சாப்பிடுவதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவுக்கு பிஐபி உண்மை கண்டறியும் பிரிவு மறுப்புத் தெரிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட விசாரணையில், அந்த குழந்தைகளின் வீடுகளில் போதிய அளவில் உணவுப் பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
https://twitter.com/PIBFactCheck/status/1252169585832255488?s=20
இதேபோன்ற செய்தி அருணாச்சல பிரதேசத்திலிருந்தும் வெளியாகியுள்ளது. அதில், உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால், பாம்புகளை மக்கள் சாப்பிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக மாநில அரசு கூறிய கருத்துக்களுடன் குவாஹத்தியில் உள்ள பிஐபி-யின் மண்டல அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. இதன்மூலம், அந்த செய்தி பொய்யானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்துக்கான உணவுப் பொருட்கள் வழக்கமாக விநியோகிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://twitter.com/PIB_Guwahati/status/1252570210382602240?s=20
பின்னணி
சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரவுவதைத் தடுக்கவும், உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்தும், சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவரும் வதந்திகளை முறியடிக்க தனிப்பட்ட பிரிவை பிஐபி அமைத்துள்ளது. டுவிட்டரில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கான “PIB Fact Check” உள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை தொடர்ந்து கண்காணித்து, அதன் உண்மைத்தன்மை குறித்து விரிவாக ஆய்வுசெய்து, போலியான செய்திகளை கண்டறிகிறது. அதோடு, டுவிட்டரை பயன்படுத்துவோர் பயனடையும் வகையில், “PIBFactCheck” என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, டுவிட்டரில் உள்ள அதிகாரப்பூர்வமான மற்றும் உண்மையான தகவல்களை பிஐபி இந்தியா மற்றும் பிஐபி மண்டல பிரிவுகள் வெளியிட்டு வருகின்றன.
சமூக வலைதளத்தில் வெளியாகும் தகவல்கள், ஆடியோ அல்லது வீடியோ என எந்தத் தகவலின் உண்மைத்தன்மையை அறியவும் யார் வேண்டுமானாலும் PIBFactCheck-க்கு தகவல் அளிக்கலாம். இதனை இணையதளம் மூலம் https://factcheck.pib.gov.in/ என்ற வலைதளத்தில் அல்லது வாட்ஸ்அப் எண் +918799711259 அல்லது மின்னஞ்சலில் pibfactcheck[at]gmail[dot]com என்ற முகவரியில் அளிக்கலாம். இதுகுறித்த விவரங்கள், பிஐபி-யின் https://pib.gov.in என்ற இணையதளத்திலும் இடம்பெற்றுள்ளன.
====
(Release ID: 1617026)
Visitor Counter : 229
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada