ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கோவிட்19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், ரசாயனங்கள், உரங்கள், மருந்துகள் கிடைப்பதை மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன: கவுடா

Posted On: 21 APR 2020 7:08PM by PIB Chennai

கோவிட் 19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மருந்துகள், உரங்கள், தொற்று வராமல் தடுக்கக்கூடிய இரசாயனங்கள், போன்றவை போதுமான அளவு, கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், தமது அமைச்சகம் மேற்கொண்டு வருவதாக இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறைக்கான மத்திய அமைச்சர் திரு டி வி சதானந்தகவுடா கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு உரங்கள்; பொதுமக்களுக்கும் சுகாதார சேவைகளுக்கும் தேவையான மருந்துகள்; கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான தொற்றுநோய் தடுப்பு சுத்திகரிப்புக்கான இரசாயனங்கள் ஆகியவை கிடைப்பதை மேம்படுத்துவதற்கான உத்திகளை வகுப்பது குறித்து, தமது அமைச்சகத்தின் கீழ் உள்ள மூன்று துறைகள் – உரத்துறை, மருந்தாளுமை மற்றும் இரசாயனத் துறை மற்றும் பெட்ரோ- இரசாயனத் துறை -- ஆகிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக திரு கவுடா, ட்வீட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள் எந்த வித இடையூறும் இல்லாமல் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தமது அமைச்சகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் தங்களுக்கிடையேயும், சம்பந்தப்பட்ட பிற அமைச்சக அதிகாரிகளுடனும் தொடர்ந்து, நெருக்கமாக, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்..



(Release ID: 1617022) Visitor Counter : 181