அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்-19 ஆராய்ச்சிக் கூட்டமைப்புக்கு உயிர்தொழில் நுட்பவியல் துறை– உயிர் தொழில்நுட்பவியல் தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் அழைப்பு

Posted On: 20 APR 2020 10:41AM by PIB Chennai

உயிர்தொழில் நுட்பவியல் துறையும் (Department of Bio-Technology - DBT) உயிர் தொழில்நுட்பவியல் தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலும் (Biotechnology Industry Research Assistance Council - BIRAC) கோவிட்-19 ஆராய்ச்சிக் கூட்டமைப்புக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளன.  முதல் கட்டத்துக்கான அழைப்பு 30 மார்ச், 2020 அன்றோடு முடிவடைந்து கல்வியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து சுமார் 500 விண்ணப்பங்கள் வந்துள்ளன.  பல அடுக்கு பரிசீலனை நடந்து கொண்டு இருக்கும் நிலையில்  உபகரணங்கள், நோய் அறிதல். தடுப்பு மருந்து, சிகிச்சை மற்றும் இதர இடையீடுகள் ஆகியவற்றுக்கு இதுவரையிலும் 16 திட்ட முன்மொழிவுகள் நிதி உதவி பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் திட்டத்தை மேற்கொள்பவர்கள் பல்வேறு வகையான வசதிகளைp பயன்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதற்காக பன்முகப்பட்ட அணுகுமுறையானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  ஆய்வு முன்னேற்றத்தின் பல கட்டங்களை இந்த ஆராய்ச்சிக் கூட்டமைப்பானது தடம் அறிந்து சரி பார்க்கும்.  இதற்கான நிதியை தேசிய பயோஃபார்மா மிஷன் வழங்குகிறது. 

நோவல் கொரோனா வைரஸ் SARS-CoV-2க்கு எதிரான டி.என்.ஏ தடுப்பு மருந்தை உருவாக்கும் கேடிலா ஹெல்த்கேர் லிமிடெட்டுக்கு நிதிஉதவி அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  செயலிழக்கப்பட்ட ரேபீஸ் கிருமி அடிப்படையில் கோவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக பாரத் பயோடெக் இண்டர்நேஷனல் லிமிடெட்டுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ள மக்கள் இருக்கும் இடங்களில் மறுசேர்ப்பு பி.சி.ஜி தடுப்பு மருந்து (VPM1002) குறித்த பரிசோதனையை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்து பார்க்கும் கட்டம் III ஆய்வுக்காக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட்டுக்கு நிதி உதவி தரப்படும். தேசிய நோய் எதிர்ப்பியல் நிறுவனத்தில் SARS-CoV-2 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்காக நோவல் கொரானா தடுப்பு மருந்து மதிப்பீட்டு முறையை நிர்மாணம் செய்வதற்கு நிதிஉதவி அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

விர்சௌ பயோடெக் பிரைவேட் லிமிடெட்டில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட இம்யூனோகுளோபலின் ஜி (IgG) தயாரித்து, அதை வர்த்தக ரீதியில் எடுத்துச் செல்வதற்கும் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஈகுயின் ஹைப்பர் இம்யூன் குளோபலின் என்ற நோய் எதிர்ப்பொருளை பெருமளவில் தயாரிக்கவும் நிதிஉதவி அளிக்கப்படும். பரிசோதனைக் கூடத்தில் நுரையீரல் குறுவடிவ மாதிரியை உருவாக்குவதற்கு ஆன்கோசீக் பயோடெக் லிமிடெட்டுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ஹியூவெல் லைஃப்சயின்சஸ், யூபயோ பயோடெக்னாலஜி  சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட், தீத்தி லைஃப்சயின்சஸ் பிரைவேட் லிமிடெட், மேக்ஜெனோம் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், பிக்டெக் பிரைவேட் லிமிடெட் மற்றும் யாத்தூம் பயோடெக் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு மூலக்கூறு சார்ந்த மற்றும் விரைவு சோதனைக் கருவிகளை உள்நாட்டில் தயாரிக்கவும் அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கவும் நிதி உதவி அளிக்கப்படும்.

 உயிர்தொழில் நுட்பவியல் துறை தேசிய பயோஃபார்மா திட்டத்தின் கீழ் ஆந்திரப்பிரதேச மெட்டெக் மண்டலத்தில் (AMTZ) பரிசோதனைக் கருவிகள் மற்றும் வென்ட்டிலேட்டர்கள் தயாரிப்பதற்கான பொது வசதி உருவாக்கப்படும்.  இந்த வசதிகள் பல்வேறு உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ள உதவும்.

 



(Release ID: 1616362) Visitor Counter : 292