உள்துறை அமைச்சகம்

அத்தியாவசியப் பொருள்களை முன்பு போல விநியோகிக்க, மின்னணு-வணிக நிறுவனங்களுக்கு அனுமதி.

Posted On: 19 APR 2020 6:45PM by PIB Chennai

கொவிட்-19க்கு எதிரான தேசிய அளவிலான ஊரடங்கு தொடர்பாக, மாற்றியமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த விதிமுறைகளின் கீழ், சில நடவடிக்கைகளுக்கு விலக்கு அளிக்க அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

(https://www.mha.gov.in/sites/default/files/MHA%20order%20dt%2015.04.2020%2C%20with%20Revised%20Consolidated%20Guidelines_compressed%20%283%29.pdf)

இன்று வெளியிடப்பட்ட  உத்தரவில், மாற்றியமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த விதிமுறைகளின் 14(வி) பிரிவின்படி, இ-வணிக நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இ-வணிக நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருள்களை விற்பனை செய்வதற்கான தடை தொடர்ந்து நீடிப்பதாக அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முன்பு போல, பிரிவு 13(ஐ)யின் படி, அத்தியாவசியப்பொருள்கள் விற்பனையைத் தொடர்ந்து அந்த நிறுவனங்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.(Release ID: 1616317) Visitor Counter : 35