சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்
Posted On:
19 APR 2020 5:37PM by PIB Chennai
2020 ஏப்ரல் 20 ஆம் தேதியில் இருந்து, நோய் பரவல் இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. ஆனால் நோய் பரவல் தீவிரமாக உள்ள ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் எந்தத் தளர்வும் இருக்காது. தங்கள் பகுதி தேவைகளுக்கு ஏற்ப மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம். நோய் பரவல் அதிகம் உள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி குறிப்பிடப் பட்டுள்ள பகுதிகள்:
- கோவிட்-19 நோய்த் தாக்குதல் அல்லது தொகுப்புகள் அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகள்.
- நோய்த் தாக்கியவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள அல்லது பாதித்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 4 நாட்களுக்கும் குறைவாக உள்ள பகுதிகள்.
நோய்ப்பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, நோய் பரவல் பகுதி, இடைமுகப் பகுதி என எல்லைகளை உள்ளாட்சி நிர்வாகம் வரையறை செய்யும்.
இது அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும் வரையறை என்பதால், பாதிப்புகள் அதிகமாக வந்தால் அந்தப் பகுதி சிவப்பு மண்டலப் பகுதியாக, நோய்ப் பரவல் அதிகம் உள்ள பகுதியாக மாறிவிடும். நோய்ப் பரவல் அதிகம் உள்ள பகுதிகளை, படிப்படியாக இயல்பு நிலை திரும்ப வசதியாக, முடக்கநிலைக் கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல் செய்யப்பட வேண்டும். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பகுதிகளிலும் சமூக இடைவெளி போன்ற வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
ஒட்டுமொத்தமாக மத்திய மாநில அரசுகள் மூலம் 2144 பிரத்யேக கோவிட்-19 மருத்துவமனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 755 கோவிட் மருத்துவமனைகளும், 1389 கோவிட் சுகாதார மையங்களும் அடங்கும்.
நாட்டில் 15,712 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2231 பேர், அதாவது மொத்த பாதிப்பில் 14.19 சதவீதம் பேர் குணமாகியுள்ளனர் / குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
(Release ID: 1616316)
Visitor Counter : 213
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam