சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து சவுதி அரேபியாவில் ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டம்

Posted On: 19 APR 2020 9:46PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றை கையாள பரஸ்பரம் மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும் என்று, 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனின் சர்வதேச அமைப்பான ஜி 20 நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் காணொளி காட்சி கூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று வலியுறுத்தினார். அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜி20-இல் சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, ரஷ்ய கூட்டமைப்பு, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா ஆகியவை 19 உறுப்பு நாடுகளாகும்.

"கோவிட்-19 தொற்றுக்கு எதிரான நமது போரில், அவரவர்களும் தங்களது நாடுகளில் நிலைமையை சமாளித்து கட்டுக்குள் வைத்திருப்பதற்காக, உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்," என்று அந்தகூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். "உலகம் இன்று சந்தித்து வரும் சுகாதார சிக்கல், நம் அனைவரையும் இணைக்கும் தன்மைக்குள் ஆழ்ந்து கவனம் செலுத்த வாய்ப்பை உருவாக்கியுள்ள அதே வேளையில், வெற்றி பெறுவதற்காகநமக்கு ஒன்றுபட்ட வலிமையையும் அறிவையும் வழங்கி உள்ளது," என்று கூறினார். கடந்த காலங்களில் உலகின் வெற்றிகரமான ஒன்றுபட்ட முயற்சிகளை பற்றிப் பேசிய அவர், "ஒன்றுபட்ட நோக்கம், ஆதரவு மற்றும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்ததன் மூலம், மக்களின் ஆரோக்கியத்துக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட மிரட்டல்களை நாம் உலக சமூகமாக எதிர்கொண்டு வெற்றிகரமாக கையாண்டோம். கொரோனா வைரஸ் நோயை (கோவிட்-19) கையாளஅதேபோன்ற ஒத்துழைப்பையும், பரஸ்பரம் மரியாதை மிகுந்தமற்றும் பயனுள்ள வகையில் இணைந்து செயலாற்றுதலை நான் எதிர்பார்க்கிறேன். ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா போன்ற சில நாடுகள் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், மீதமுள்ள சில நாடுகள் கோவிட்-19 உடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இயல்பு நிலைக்கு திரும்ப நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு தேவைப்படுகிறது," என்றார்.

நாட்டில் தற்போதைய கோவிட் நிலைமை குறித்து பேசிய அவர், "ஏப்ரல் 19 ம் தேதியான இன்று வரை, 25 நாட்கள் பொது முடக்கத்தை நாங்கள் நிறைவு செய்துள்ளோம். இது மே 3ம் தேதி வரை நீடிக்கும். இதன் பலனாக நாங்கள் உணர்ந்தது என்னவென்றால்‍, மார்ச் 17ம் தேதி வரை 3.4 நாட்களாக இருந்த எங்களது பாதிப்பு இரட்டிப்பாகும் வீதம், மார்ச் 25 ம் தேதி அன்று 4.4 நாட்களாக குறைந்து, தற்போது 7.2 நாட்களாகஉள்ளது," என்றார்.

கொவிட்-19 எதிர்த்து போராடுவதில் இந்தியாவின் அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளித்து பேசிய அவர், "இந்த தடவை எங்கள் அணுகுமுறையின் தனிச்சிறப்பு ஐந்து முனைகளாகும்: (1) நிலைமை குறித்த தொடர் விழிப்புணர்வை பராமரித்தல், (2)  தடுப்பு மற்றும் செயல்மிகு அணுகுமுறை, (3) மாறும் நிலைமைக்கு ஏற்ப படிப்படியான எதிர் நடவடிக்கை, (4) துறைகளுக்குள் அனைத்து மட்டங்களிலும் ஒத்துழைப்பு, மற்றும் இறுதியானதும் மிக முக்கியமானதுமான (5) நோயை எதிர்த்து போரிட மக்கள் இயக்கத்தை தோற்றுவித்தல்," என்றார்.

***(Release ID: 1616313) Visitor Counter : 66