பாதுகாப்பு அமைச்சகம்
இராணுவ வீர்ர்களை முன்னணிக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்கள்
Posted On:
17 APR 2020 6:35PM by PIB Chennai
பெங்களூர், பெல்காம், செகந்தராபாத் ஆகிய இடங்களில் உள்ள இராணுவ பயிற்சி நிலையங்களில் பயிற்சிகளை நிறைவு செய்து, வட இந்தியாவின் செயல் களங்களில் பணியில் சேர உள்ள சுமார் 950 இராணுவப் பணியாளர்கள், இன்று (ஏப்ரல் 17 ம் தேதி 2020) பெங்களூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டுச் சென்றனர். அனைத்து இராணுவப் பணியாளர்களும் கட்டாயமான தனிமைப்படுத்துதல் காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், மருத்துவரீதியாக நலமுடன் இருக்கிறார்கள். இந்த ரயில், அட்டவணைப்படி ஏப்ரல் 20ம் தேதி அன்று சென்று சேரும்.
இரயில் நடைமேடை, இரயில் பெட்டிகள், அனைவரது உடமைகள் ஆகிய அனைத்தும் தொற்றுநோய் தடுப்பு தெளிப்பான்களால் சுத்திகரிக்கப்படுவது உட்பட, கோவிட் 19 நோய் தடுப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இது தவிர சுத்திகரிப்பு தெளிப்பு டணல் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இரயிலில் ஏறும் போதும், பரிசோதனை செய்யும் போதும் சமூக விலகியிருத்தல் உறுதி செய்யப்பட்டது.
நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள இருக்கும் இராணுவப் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் இரண்டாவது இரயில் பின்னர் புறப்பட உள்ளது.
***
(Release ID: 1615682)
Visitor Counter : 167
Read this release in:
Punjabi
,
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Telugu
,
Kannada