பிரதமர் அலுவலகம்

இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் பற்றி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு பிரதமர் பாராட்டு; இது பணப்புழக்கத்தை அதிகரித்து, கடனுதவி வழங்குவதையும் அதிகரிக்கும் என்கிறார் பிரதமர்

Posted On: 17 APR 2020 2:54PM by PIB Chennai

இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.  இந்த நடவடிக்கைகள் பணப்புழக்கத்தை அதிகரித்து, கடனுதவி வழங்குவதையும் அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், ”இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்புகள், பணப்புழக்கத்தை பெருமளவு அதிகரித்து, கடனுதவி வழங்குவதையும் அதிகரிக்கும்.  இந்த நடவடிக்கைகள், நமது சிறுவணிகர்கள், சிறுகுறு தொழில் செய்பவர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு பயனளிக்கும். மாநில அரசுகளுக்கு உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

****


(Release ID: 1615358) Visitor Counter : 188