உள்துறை அமைச்சகம்

கோவிட்-19-க்குஎதிரான நடவடிக்கையாக அமல் செய்யப்பட்டுள்ள முடக்கநிலையில் இருந்து, சிறு வன விளைபொருள்கள், தோட்டப்பயிர்கள், வங்கிசாரா சேவையில் உள்ள நிதிநிறுவனங்கள், கூட்டுறவுக்கடன் சங்கங்கள்மற்றும் கிராமப்பகுதியில் கட்டுமானப்பணிகளில் சில அம்சங்களுக்கு விதிவிலக்குஅளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

Posted On: 17 APR 2020 10:42AM by PIB Chennai

கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கையாக நாடு முழுக்க அமல் செய்யப்பட்டுள்ள முடக்கநிலையில் இருந்து தொகுக்கப்பட்ட திருத்திய வழிகாட்டுதல்களின் கீழ் சில செயல்பாடுகளுக்கு விதிவிலக்கு அளிப்பது தொடர்பாக, அனைத்து அமைச்சகங்கள் / துறைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் உத்தரவு .(https://www.mha.gov.in/sites/default/files/MHA%20order%20dt%2015.04.2020%2C%20with%20Revised%20Consolidated%20Guidelines_compressed%20%283%29.pdf) பிறப்பித்துள்ளது.

கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கு முடக்கநிலையில் இருந்து விதிவிலக்கு அளிப்பதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

  • வனப்பகுதிகளில் சிறு விளைபொருள்கள் / மரக்கட்டைகள் அல்லாத வன விளைபொருள்களை மலைவாழ் மக்களும், வனங்களில் வாழும் மற்றவர்களும் சேகரிக்க, அறுவடை செய்ய மற்றும் பதப்படுத்தும் செயல்பாடுகள்.
  • மூங்கில், தேங்காய், பாக்கு, கோக்கோவா, நறுமணப் பொருள்கள் தோட்ட வேலைகள் மற்றும் அவற்றின் அறுவடை, பதப்படுத்தல், பொதியிடுதல், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் செயல்பாடுகள்.
  • வீட்டுவசதிக் கடன் நிறுவனங்கள், நுண்கடன் நிறுவனங்கள் உள்ளிட்ட வங்கிச் சேவை அல்லாத நிதிநிறுவனங்கள், குறைந்தபட்ச அலுவலர் எண்ணிக்கையுடன் செயல்படுதல்.
  • கூட்டுறவுக் கடன் சங்கங்கள்.
  • கிராமப்புறங்களில் கட்டுமான செயல்பாடுகளில், குடிநீர் விநியோகம், கழிவறை குழாய் பதித்தல் / மின்விநியோகக் கட்டமைப்புகள் உருவாக்குதல், தொலைத்தொடர்பு ஆப்டிகல் பைபர் மற்றும் கேபிள்களை பதித்தல் மற்றும் அவை தொடர்பான செயல்பாடுகள்.


(Release ID: 1615274) Visitor Counter : 213