உள்துறை அமைச்சகம்

ஜூம் (ZOOM) இணையவழி சந்திப்புத் தளத்தை, பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்.

Posted On: 16 APR 2020 4:30PM by PIB Chennai

தனிநபர்கள் ஜூம் (ZOOM) இணையவழி சந்திப்புத் தளத்தை, பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைபர் ஒருங்கிணைப்பு மையம் Cyber Coordination Centre (CyCord), அறிவுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அலுவலக நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடிய தளம் இதுவல்ல என்று இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல் ஆவணம், இந்திய கணிப்பொறி அவசரகால மறுமொழி குழு Indian Computer Emergency Response Team(Cert-In) வெளியிட்ட முந்தைய அறிவுரைகளைக் குறிப்பிட்டிருப்பதோடு, ஜூம் (ZOOM) பாதுகாப்பான தளம் அல்ல என்றும் கூறியுள்ளது. தனிப்பட்ட பயன்பாடுகளுக்காக, இந்தத் தளத்தைப் பயன்படுத்த விரும்பும், தனி நபர்களுக்கு, பாதுகாப்பு அளிப்பதற்காக விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜூம் (ZOOM) மாநாட்டு அறையில் அங்கீகாரம் இல்லாத எவரும் நுழைந்து விடுவதைத் தடுப்பது, அங்கீகாரம் இல்லாமல் பங்கேற்கும் நபர், மாநாட்டைப் பயன்படுத்தும் மற்ற பங்கேற்பாளர்களின் டெர்மினல்களைப் பாதிக்கக் கூடிய செயல்களைச் செய்யாமல் தடுப்பது ஆகியவை, இந்த அறிவுரை வழங்கப்பட்டதற்கான பரந்த நோக்கமாகும்.

தனிநபர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் குறித்து, இந்த இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தில் தெரிந்து கொள்ளலாம்(Release ID: 1615091) Visitor Counter : 85