மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

பள்ளிகளுக்கான NCERT மாற்றுக்கல்வி கால அட்டவணையை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெளியிட்டார்

Posted On: 16 APR 2020 4:31PM by PIB Chennai

கோவிட் 19 காரணமாக வீட்டிலேயே இருக்கும் மாணவர்கள், இல்லங்களிலிருந்தபடியே, கல்வி தொடர்பான செயல்களின் மூலம், தங்களது நேரத்தை, பயனுள்ள வகையில் செலவிடுவதற்காக, மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழுமம் (The National Council of Educational Research and Training - NCERT) மாற்றுக் கல்வி காலஅட்டவணையைத் தயாரித்துள்ளது. இந்த மாற்றுக் கல்வி அட்டவணை இன்று புதுதில்லியில், மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்களால் வெளியிடப்பட்டது.

           நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வீட்டிலிருக்கும் போதும், மாணவர்கள் மிகவும் சுவாரஸ்யமான, விளையாட்டுப் போக்கான முறையில் கல்வி கற்க உதவும் வகையில், கற்பிக்கும் சமூக வலைதள ஊடகங்களையும், தொழில்நுட்பக் கருவிகளையும் பயன்படுத்துவதற்கான ஆசிரியர்களுக்கான விதிமுறைகளும் இந்த அட்டவணையில் உள்ளது என்று கூறினார்.

 

 

 

அலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, குறுஞ்செய்தி மற்றும் சமூக வலைதளங்கள் உட்பட பல்வேறு கருவிகளை பயன்படுத்துவதற்கான, பல்வேறு நிலைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இது தயாரிக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கு அலைபேசியில் இணைய (இன்டர்நெட்) வசதி இல்லாமலிருக்கலாம் என்பதாலும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற பல்வேறு சமூக வலைதளக் கருவிகளைப் பயன்படுத்தும் முறையை அறியாமல் இருக்கலாம் என்பதாலும், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாகவும், அலைபேசி அழைப்பின் மூலமாகவும்,  வழிகாட்டக் கூடிய வழிகாட்டுதல் முறைகள் இதில் உள்ளன. ஆரம்ப காலகட்ட மாணவர்கள் இந்த அட்டவணையைப் பின்பற்றுவதற்கு பெற்றோர் உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அட்டவணையின் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்குமான, அனைத்துப் பாடப்பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் (திவ்யாங் குழந்தைகள்) உட்பட அனைத்து குழந்தைகளுக்குமான தேவைகள், இந்த அட்டவணையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.லியுடன் கூடிய புத்தகங்கள் (Audio Books), வானொலி நிகழ்ச்சிகள், வீடியோ நிகழ்ச்சிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

 

 

 

 

 

பாடப்புத்தகம் அல்லது பாடத்திட்டத்தில் உள்ள அத்தியாயங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவை தொடர்பான சுவாரஸ்யமான, சவாலான செயல்முறைகள் கொண்ட வாராந்திரத் திட்டம், இந்த அட்டவணையில் உள்ளது ன்று திரு. பொக்ரியால் தெரிவித்தார். மாணவர்களின் கற்றல் முடிவுகள், கருத்துக்களுடன் கோர்க்கப்பட்டிருப்பது மிக முக்கியமான அம்சமாகும். குழந்தைகள் கல்வி கற்பதன் முன்னேற்றத்தை ஆசிரியர்களும், பெற்றோர்களும் மதிப்பீடு செய்துகொள்ள வசதி செய்து கொடுப்பதே, இவ்வாறு கற்றல் முடிவுகளையும், கற்றலுக்கான கருப்பொருள்களையும் கோர்த்திருப்பதற்கான நோக்கமாகும். அதுமட்டுமல்லாமல், பாடப்புத்தகங்களில் உள்ள விஷயங்களுக்கு அப்பாலுள்ளவற்றையும், குழந்தைகள் கற்றுக் கொள்ள இது வகை செய்யும்..(Release ID: 1615077) Visitor Counter : 239