வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
கோவிட்-19 விழிப்புணர்வு மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அதிநவீன நகரங்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன
प्रविष्टि तिथि:
14 APR 2020 7:28PM by PIB Chennai
கோவிட் 19 தொற்று குறித்து அதிநவீன நகரங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் :
வதோதரா
பொது முடக்க உத்தரவை மீறுபவர்களை கண்காணிப்பதற்காக வதோதரா மாவட்ட நிர்வாகம் இரண்டு கேமராக்களுடன் இணைக்கப்பட்ட ஹீலியம் பலூனை நிறுவியுள்ளது.
பெங்களூரு
கோவிட்-19 தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெங்களூரு – கோவிட் 19 என்ற கட்டுப்பாட்டு அறையில் கர்நாடக மாநிலம் தொடர்பான அனைத்து தரவுகளையும், கொரானா குறித்தான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் அறிவிப்பு பலகையில் வெளியிடுகிறது.
கல்யாண் டோம்பிவலி
கொரோனா பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்கும், குடிமக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கும், விழிப்புணர்வு வீடியோக்கள் கே.டி.எம்.சி பேஸ் புக் பக்கத்தில் வெளியிடப்படுகின்றன.
ஆக்ரா
இ - டாக்டர் சேவா என்பது தொலைவழி காணொளி காட்சி ஆலோசனை வசதியை, ஆக்ரா அதி நவீன நகர நிறுவனம் உள்ளூர் மக்களுக்காகத் தொடங்கியுள்ளது.
காக்கிநாடா
கோவிட்-19 பற்றிய தரவுகள் அறிவிப்பு பலகையாக காக்கினாடா இணைய சேனல் வர்த்தக இணைப்பு நெறிமுறையால் உருவாக்கப்பட்டுள்ளது.
சண்டிகர்
சண்டிகரில் கோவிட் – 19 தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள ”கோவிட் எதிர்ப்பு நிலையம்” நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் உடல் வெப்பத்தை அளக்க வெப்பமானி, கைகளை சுத்தமாக கழுவ சோப்பு கரைசல் நீரும், கைகளை உலர்த்த கை உலர்த்தும் கருவியும், கிருமி நாசினியான சோடியம் ஹைப்போகுளோரைட் தெளிக்கும் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.
***************
(रिलीज़ आईडी: 1614662)
आगंतुक पटल : 163