சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட் – 19 தொற்று பற்றிய கூடுதல் விவரங்கள்

Posted On: 13 APR 2020 6:37PM by PIB Chennai

நாட்டில் கொரானா  வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக, மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து கொரானா வைரஸ்  பரவலைத் தடுக்கவும், கட்டுக்குள் கொண்டுவரவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து உயர்மட்ட அதிகாரிகளின் வாயிலாக கண்காணிக்கப்படுகின்றது.

சுகாதார குடும்ப நலன் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநர் மற்றும் 38 ஆய்வக இயக்குநர்கள் முன்னிலையில் கொரானா வைரஸ் ஆராய்ச்சி முயற்சிகளை ஆய்வு செய்தார்.

அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் முக்கிய தனியார் தொழில் துறை, பொதுத்துறை நிறுவனங்கள், துறைகள் மற்றும் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகங்களுடன் இணைந்து செயல்பட்டதில் ஐந்து விஷயங்களை அடையாளம் கண்டுள்ளனர்:

  • டிஜிட்டல் முறையில் மூலக்கூறுகளை கண்காணித்தல்

 

  • விரைவாகவும் குறைந்த செலவிலும் கண்டறிதல்

 

  • புதிய மருந்துகள், மருந்துகளின் மறுபயன்பாடு அதனுடன் தொடர்புடைய உற்பத்தி செயல் முறைகள்

 

  • மருத்துவமனை உபகரணங்கள், தனிப்பட்டோரின் பாதுகாப்பு உபகரணங்கள்

 

  • அனைத்து விநியோக தொடர்புகள் மற்றும் அதன் நிர்வாக அமைப்புகள்

கொரானா வைரஸ் தொற்றுக்கு மாவட்ட நிர்வாக அளவில் சரியான நேரத்தில் தீர்வுகாண, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

ஓன்று பட்ட கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், விரைவு நடவடிக்கைக் குழுவுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன.

நோயாளிகள் கண்டறியப்பட்ட 15 மாநிலங்களில் உள்ள 25 மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்தியது அபரிதமான முடிவுகளைத் தரத் தொடங்கியது. இந்த மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிதாக எந்தவொரு நபருக்கும் நோய்தொற்று பதிவாகவில்லை, மேலும் எதிர்காலத்தில் எவருக்கும் நோய் தொற்று எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக தீவிர கண்காணிப்பில் இயங்கி வருகின்றன.

ஏப்ரல் 10 ஆம் தேதி நிலவரப்படி, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் 30 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் கோவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கு தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாக்க ரூ 28,256 கோடி நிதி உதவி பெற்றுள்ளனர்.அதன் விவரங்கள் பின்வருமாறு:

  • பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவில் கணக்கு வைத்திருக்கும் 19.86 கோடி பெண்கள் ரூ 9930 கோடி பெற்றுள்ளனர்.

 

  • பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ், 6.93 கோடி விவசாயிகள் ரூ 13,855 கோடி பெற்றுள்ளனர்.

 

  • 2.82 கோடி விதவைகள், மூத்த குடிமக்கள் மற்றும் திறனாளிகள்    ரூ 1405 கோடி பெற்றுள்ளனர்.

 

  • 2.16 கோடி கட்டட மற்றும் உள்கட்டமைப்பு தொழிலாளர்களுக்கு     ரூ 3066 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் அபாயத்தை அறிந்து கொள்வதற்காக, குடிமக்களுக்கு ஆரோக்ய சேது என்ற கை பேசி செயலி 11 மொழிகளில் வடிவமைக்கப்பட்டு, 3.5 கோடி பயனாளர்களை சென்றடைந்துள்ளது.

27 மாநிலங்களில் உள்ள மாநில கிராமப்புற வாழ்வாதார பணிகளின் கீழ், 78,373 சுய உதவிக்குழு உறுப்பினர்களால் 1.96 கோடி முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேசிய மாணவர் படையின்  தன்னார்வளர்கள், சிவில் நிர்வாகத்திற்கு உதவுகிறார்கள். கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பங்களிக்க 50,000 க்கும் மேற்பட்டோர் முன்வந்துள்ளனர்.

நேற்று மேலும் 796 நபர்களுக்கு புதிதாக நோய் தொற்று கண்டறியப் பட்டதுடன், நாட்டில் மொத்தம் 9152 பேர் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, 857 நபர்கள் குணமடைந்து வீடுதிரும்பியுள்ள நிலையில் 308 இறப்புகள் பதிவாகியுள்ளன.

கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப பிரச்சினைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்த அனைத்து உண்மையான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://www.mohfw.gov.in/ என்ற வலைதளத்தை பார்வையிடவும்

***********************


(Release ID: 1614346) Visitor Counter : 179