தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பான குறைகளைக் களைய 20 கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு

Posted On: 14 APR 2020 11:58AM by PIB Chennai

கோவிட்-19 தொற்று பின்னணியில் எழும் பிரச்சினைகளால், மத்திய தலைமை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தின் கீழ் 20 கட்டுபாட்டு அறைகளை இந்தியா முழுவதும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைத்துள்ளது. கீழ்கண்ட காரணங்களுக்காக இந்த கட்டுபாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

. மத்திய மண்டலத்தில் பணியிலுள்ள தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பான குறைகளைக் களைய.

. பல்வேறு மாநில அரசுகளோடு ஒன்றிணைந்து இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை தணிக்க.

தொலைபேசி எண்கள், வாட்ஸ் அப், மற்றும் மின்னஞ்சல்களின் மூலம் தொழிலாளர்கள் இந்த அழைப்பு மையங்களை தொடர்பு கொள்ளலாம். சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ளதொழிலாளர் அமலாக்க அலுவலர்கள், உதவி தொழிலாளர் ஆணையர்கள், மண்டல தொழிலாளர் ஆணையர்கள் மற்றும் துணை தலைமை தொழிலாளர் ஆணையர்கள் ஆகியோரால் இந்த கட்டுப்பாட்டு அறைகள் நிர்வகிக்கப்படுகின்றன. மத்திய தலைமையிடதலைமை தொழிலாளர் ஆணையரால் இந்த 20 அழைப்பு மையங்களின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு மேற்பார்வையிடப் படுகின்றன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ளஅதிகாரிகள் / அலுவலர்களின் விவரங்கள், தொழிலாளர்கள் உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

 

பெயர்                          பதவி                  மின்னஞ்சல் முகவரி                      கைபேசி எண்

திரு. வி.எம். மாணிக்கம்    DY CLC(C)               support-dylcchn[at]nic[dot]in                    9677112646

திரு. அண்ணாதுரை         RLC(C)                   support-dylcchn[at]nic[dot]in                    9884576490

திரு. பி. மோகன்தாஸ்       ALC(C)                   support-dylcchn[at]nic[dot]in                    9272927808

திரு. ராமானந்த் யாதவ்      LEO(C)                   support-dylcchn[at]nic[dot]in                    9791013944

*** 
 


(Release ID: 1614307) Visitor Counter : 376