உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

உயிர் காக்கும் உதான் விமானங்கள் நாடு முழுவதும் 2 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாகப் பறந்து மருத்துவப் பொருள்களைக் கொண்டு சென்றன

Posted On: 13 APR 2020 4:44PM by PIB Chennai

கொவிட்-19 க்கு எதிராகப் போராடி வரும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு அத்தியாவசிய மருத்துவ சரக்குகளைக் கொண்டு செல்ல 218க்கும் மேற்பட்ட லைஃப்லைன் உதான் விமானங்கள் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையினால் (MoCA) இயக்கப்பட்டுள்ளன என்று சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் (பொறுப்பு) திரு. ஹர்தீப் சிங் பூரி, ஒரு சுட்டுரையில் இன்று தெரிவித்துள்ளார். உயிர் காக்கும் உதான் விமானங்கள் இன்று வரை 2,05,709 கி.மீ தூரம் பயணித்திருப்பதுடன், சுமார் 377.50 டன் சரக்குகளையும் கொண்டு சென்றுள்ளது என தனது சுட்டுரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவற்றில் 132 விமானங்களை ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் நிறுவனங்கள் இயக்கியுள்ளன. ஏப்ரல் 12, 2020 அன்று கொண்டு செல்லப்பட்ட சரக்கு 4.27 டன் ஆகும். கொவிட்-19 க்கு எதிரான போரில், மருத்துவ சரக்கு விமானங்களை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மிகவும் திறமையாகவும், செலவு குறைந்த வகையிலும் கொண்டு செல்ல சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமும், விமானத் துறையும் இந்தியாவிற்கு பக்கபலமாக உள்ளது.

******************



(Release ID: 1614030) Visitor Counter : 177