நிதி அமைச்சகம்

பிரதம மந்திரி ஏழைகள் நலத் திட்டத்துக்கு டிஜிட்டல் முறை உடனடி பணப் பட்டுவாடா

Posted On: 12 APR 2020 7:05PM by PIB Chennai

வங்கிக் கணக்கு வைத்திருப்போரின் ஜன் தன் வங்கிக் கணக்குடன் இதர வங்கிக் கணக்குகள், அவர்களது கைபேசி எண்கள், ஆதார் எண்கள் ஆகியவை டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ளன. ஜன் தன் – ஆதார் – மொபைல் எனப்படும் இந்த நடைமுறையின் மூலம் பென்ஷன் உள்ளிட்டவை நேரடியாகப் பயனாளிகளைச் சென்றடைவதால் இத்திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. பிரதம மந்திரி ஜன் தன் திட்டம், 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இது வங்கிக் கணக்குகள் இல்லாதவர்களும் வங்கிக் கணக்குத் தொடங்குவதை ஊக்குவிப்பதற்கானது. நாடு முழுவதும் உள்ள 126 கோடி வங்கி நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளில் கடந்த மார்ச் 20ம் தேதி வரையில் மொத்தம் 38 கோடிக்கு மேற்பட்ட கணக்குகள் பிரதம மந்திரி ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளன.

செயலாக்கம், விரைவு, துல்லியமான பரிமாற்றங்கள்:

வங்கிக் கணக்குகளை வங்கிக் கிளைகள், வணிக மையங்கள், வர்த்தக நிலையங்களில் நேரடியாகவோ இணைய வழியாகவோ ரொக்கப் பரிமாற்றத்தையோ, டிஜிட்டல் முறை பணப் பரிமாற்றத்தையோ  மேற்கொள்ளலாம்.

டிஜிட்டல் பணப்பட்டுவாடா நடைமுறையில் உள்ள முறைகள்:

  • ஆதாருடன் கூடிய பணப்பட்டுவாடா முறை  : இது ஆதார் அட்டையின் அடிப்படையில் வங்கிகள், கிளைகளில் பணத்தைப் பெற்றுக் கொள்ள உதவும்.
  • பீம் ஆதார் வழங்கீடு : ஆதார் அட்டையைக் கொண்டு வர்த்தகர்களுக்குப் பணம் செலுத்துவதற்கு உதவும்.
  1. ரூபே வங்கிக் கணக்கு அட்டைகள் : மார்ச் 31ம் தேதி வரையில் மொத்தம் ரூ. 60.4 கோடி அளவுக்கு ரூபே வங்கிக் கணக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.   அவற்றில் பிரதம மந்திரி ஜன் தன் திட்டத்தின் கீழ் ரூ. 29 கோடி அளவுக்குப் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கணக்கு அட்டைகளை தானியங்கி பணப்பட்டுவாடா நிலையங்களிலும் பணம் எடுப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  விற்பனை மையங்களிலும்  மின் வணிக டிஜிட்டல் பணச் செலுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  2. ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் வசதி : இந்த நடைமுறை உடனடியாக அதே நேரத்தில் பணத்தைச் செலுத்துவதற்கான முறையாகும். இது ஒரு நபர் மற்றொருவருக்கும் அதேபோன்று ஒருவர் வணிகருக்கும்  நேரில் பணம் கொடுப்பதைப் போன்றது.
  3. பாரத் கட்டணம் செலுத்தும் முறை : இது பயன்பாட்டு கட்டணங்களுக்கு  இணையம் வழியாகவும் வங்கிகள் மூலமாகவும் பணமாகவோ டிஜிட்டல் வழியாகவோ கட்டணம் செலுத்த வகை செய்கிறது.

 

மேலே குறிப்பிடப்பட்ட டிஜிட்டல் பணம் செலுத்தும் அமைப்பின் மூலம் 30 கோடிக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு மொத்தம்       ரூ. 28,256 கோடி அளவுக்கு வழங்கப்பட்டுள்ளது. “கோவிட் 19” தொற்று காரணமாக பொது முடக்கம் அமல் காரணமாகப் பாதிக்கப்பட்டோரின் நலனுக்காக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கடந்த மார்ச் 26ம் தேதி அறிவித்த பிரதம மந்திரி ஏழைகள் நலத் திட்டத்தின் கீழ் இது செலுத்தப்படுகிறது.

பிரதம மந்திரி ஏழைகள் நலத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குக் கீழே குறிப்பிட்ட தொகை கடந்த ஏப்ரல் 10ம் தேதி வரையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

 

திட்டம்

பயனாளிகள்

உத்தேச தொகை

பிரதம மந்திரி ஜன் தன் திட்டத்தின் கீழ் கணக்கு வைத்துள்ள மகளிருக்கு

19 கோடி 86 லட்சம் (97%)

ரூ. 9930  கோடி

பிரதம மந்திரி கிஸான் திட்டத்தின் கீழ் வரும் விவசாயிகளுக்கான பணம் வழங்கல்

6 கோடி 93 லட்சம் (8 கோடியில்)

ரூ. 13,855  கோடி

தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் (விதவையர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள்

2 கோடி 82 லட்சம்

ரூ. 1405  கோடி

கட்டட மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள்

2 கோடி 16 லட்சம்

ரூ. 3066  கோடி

மொத்தம்

31 கோடியே 77 லட்சம் பேர்

ரூ.  28,256  கோடி

 


(Release ID: 1613842) Visitor Counter : 297