உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

உயிர் காக்கும் உதான் செயல்பாடு (Operation lifeline UDAN) கீழ் மருத்துவ சரக்கு விமானங்கள் ஒரே நாளில் நாட்டிற்கு 108 டன் அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்கின்றன

Posted On: 12 APR 2020 7:10PM by PIB Chennai

கொவிட்-19 க்கு எதிரான இந்தியா நடத்தும் போருக்கு ஆதரவாக நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு அத்தியாவசிய மருத்துவச் சரக்குகளைக் கொண்டு செல்ல 214க்கும் மேற்பட்ட லைஃப்லைன் உதான் விமானங்கள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் (MoCA) இயக்கப்படுகின்றன. இன்று வரை கொண்டு செல்லப்பட்ட சரக்கு சுமார் 373.23 டன் ஆகும். மேலும் உயிர் காக்கும் உதான் விமானங்கள் சென்ற வான்வழி தூரம் 1,99,784 கி.மீக்கும் அதிகமாகும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி. உஷா பதீ (Usha Padhee) கூறுகிறார். ஏப்ரல் 11, 2020 அன்று மட்டும்  கொண்டு செல்லப்பட்ட சரக்குகளின் எடை 108 டன் ஆகும்.

உயிர்காக்கும் உதான் விமானங்கள் தொடர்பான பொது தகவல்கள்  https://esahaj.gov.inlifeline_udan/public_info என்ற இணையதளத்தில் தினம்தோறும் பதிவேற்றப்படுகிறது.

சர்வதேசத் துறை

மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கொவிட்-19 க்கான நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்வதற்காக, 2020 ஏப்ரல் 4 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு விமானப் பாலம் (Air-bridge) நிறுவப்பட்டுள்ளது


(Release ID: 1613817) Visitor Counter : 127