ரெயில்வே அமைச்சகம்

இந்த கோவிட்-19 ஊரடங்கு நேரத்தில் உள்கட்டமைப்பு துறைக்குத் தேவையானவற்றை இந்திய ரயில்வே தொடர்ந்து வழங்கி வருகிறது

Posted On: 12 APR 2020 8:14PM by PIB Chennai

இந்த கோவிட்-19 ஊரடங்கு நேரத்தில் உள்கட்டமைப்பு துறைக்குத் தேவையானவற்றை இந்திய ரயில்வே தொடர்ந்து வழங்கி வருகிறது. மேலும், அத்துறைக்கான விநியோகச் சங்கிலி இணைப்பை மேம்படுத்தியும் உள்ளது.

கோவிட்-19 ஊரடங்கு நேரத்தில், இந்திய ரயில்வே  தொடர்ந்து உள்கட்டமைப்புத் துறைக்குத் தேவையானவற்றை வழங்கி வருகிறது.

2020 ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 11ஆம் தேதி வரையிலான முதல் 11 நாட்களில், ரயில்வே 1,92,165 பெட்டிகளில் நிலக்கரி, 13,276 பெட்டிகளில் பெட்ரோலியப் பொருள்களை (ஒரு பெட்டியில் 58 முதல் 60 டன் பொருட்கள் இருக்கும்) ஏற்றிச் சென்றுள்ளது.

பொருள்களின் தடையற்ற இயக்கத்துக்காக ரயில்வே அமைச்சகத்தின்  சார்பில், அவசர கால சரக்குக் கட்டுப்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்திய ரயில்வேயும், மத்திய உள்துறை விவகாரங்கள் அமைச்சகமும், மாநில அரசுகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக அதை களைந்து வருகின்றன.



(Release ID: 1613816) Visitor Counter : 123