அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஃபரீதாபாதில் கோவிட் 19 ஆய்வுப் பிரிவு: இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம் ஒப்புதல்

Posted On: 12 APR 2020 11:52AM by PIB Chennai

ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் இயங்கிவரும் சுகாதார அறிவியல் தொழில்நுட்ப செயல்பாட்டு நிறுவனத்தில் (Translational Health Science and Technology Institute- THSTI) உள்ள உயிரியல் மருத்துவ ஆய்வகம் (The bioassay laboratory) அங்குள்ள ஈஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் “கோவிட் 19” தொற்று குறித்து பரிசோதிக்கும்  விரிவாக்க மையமாகச் செயல்படும். சுகாதார  அறிவியல் தொழில்நுட்ப செயல்பாட்டு நிறுவனம் மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையின் கீழ் வருகிறது. ஃபரீதாபாத் பகுதியில் இயங்கும் “கோவிட் 19” பரிசோதனைக்கான முதல் ஆய்வகம் இதுதான்.

இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஈஎஸ்ஐசி மருத்துவமனை நிர்வாகத்துக்கும் சுகாதார அறிவியல் தொழில்நுட்ப செயல்பாட்டு நிறுவனத்துக்கும் இடையில் கையெழுத்தானது.

அதன்படி உயிரியல் மருத்துவ ஆய்வகத்தின் நிபுணர் குழு ஈஎஸ்ஐ மருத்துவமனையைச் சேர்ந்தவர்களுக்கு “கோவிட் 19” சோதனைக்கான உரிய பயிற்சி அளிக்கும். சுகாதார அறிவியல் தொழில்நுட்ப செயல்பாட்டு நிறுவனத்துக்கு மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் பயோடெக்னாலஜி துறை நிதியுதவி அளிக்கும். ஈஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.


(Release ID: 1613601)