பாதுகாப்பு அமைச்சகம்

போர்ட்பிளேரில் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்துக்கு இந்திய விமானப்படை ஒத்துழைப்பு

Posted On: 12 APR 2020 11:20AM by PIB Chennai

கொவிட்-19 நெருக்கடி நேரத்தில் போர்ட்பிளேரில் தேவைப்படுபவர்களுக்கு உணவு விநியோகத்தை  உத்குரோஷ் கடற்படை விமானத் தளம் மற்றும் பொருள்வகை அமைப்பு மேற்கொண்டது.

விமான தளத்தில் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த 155 தொழிலாளர்களுக்கு உத்குரோஷ் கடற்படை விமானத் தளம், உணவு விநியோக முகாமுக்கு ஏற்பாடு செய்தது. இந்தத் தொழிலாளர்கள் தற்போது, விமான தளத்துக்கு அருகிலேயே, தங்கியுள்ளனர்.

போர்ட்பிளேரின் பொருள்வகை அமைப்பின் ஒரு குழு, வன்வாசி கல்யாண் ஆசிரமத்துக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கும், ஊழியர்களுக்கும் சமைத்த உணவுகள் மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கியது. தன்னார்வ தொண்டு நிறுவனமான வன்வாசி கல்யாண் ஆசிரமம், ஆதிவாசி குழந்தைகளுக்கு உணவும், தங்க இடமும் அளித்து வருகிறது. இந்த அமைப்பு போர்ட்பிளேரில், 38 குழந்தைகள் தங்கியுள்ள பிரிவை நடத்தி வருகிறது. மருத்துவ சிகிச்சைக்காக போர்ட்பிளேர் வரும் ஏழை ஆதிவாசி குடும்பங்களுக்கு தங்கும் வசதியை இந்த அமைப்பு அளித்து வருகிறது. கொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கும், ஊழியர்களுக்கும் ஏற்படுத்தி, ஊரடங்கு காலத்தில், தொற்று பரவாமல் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கைகளை இந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது.



(Release ID: 1613600) Visitor Counter : 130